கோவையில் மறைந்த நடிகர் மயில்சாமிக்கு அவரது குரலில் பேசி மிமிக்ரி கலைஞர்கள் அஞ்சலி!

மறைந்த நடிகரும், மிமிக்ரி கலைஞருமான மயில்சாமியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அவரது குரலிலேயே பேசி தமிழ்நாடு பலகுரல் கலைஞர்கள் அஞ்சலி செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.



கோவை: கோவையில் நடைபெற்ற நடிகர் மயில்சாமியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பல குரல் கலைஞர்கள் அவரது குரலிலேயே பேசி அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, மாரடைப்பு ஏற்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். நகைச்சுவை, குணசித்திரம் என தமிழ் திரையுலகில் தனி இடத்தை பிடித்திருந்த நடிகர் மயில்சாமி மேடைகளில் மிமிக்ரி செய்வதிலும் தனி திறமை கொண்டவர்.



இந்நிலையில் இவரது மறைவு திரையுலகம் மட்டுமின்றி பல குரல் கலைஞர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே கோவை சரவணம்பட்டி பகுதியில் தமிழ்நாடு பலகுரல் கலைஞர்கள் சார்பில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.



இதில் மறைந்த மயில்சாமியின் உருவ படத்திற்கு பல குரல் கலைஞர்கள் மாலையிட்டு மரியாதை செலுத்தினர். திரைப்படம் மட்டுமின்றி மேடைகளில் மிமிக்ரி செய்வதிலும் தனி ரசிகர்களை கொண்ட அவருக்கு, அவரது குரலிலேயே பேசி பல குரல் கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினர்.



குறிப்பாக பலகுரல் கலைஞர்கள் மறைந்த மயில்சாமி அடிக்கடி மிமிக்ரி செய்யும் எம்.ஜி.ஆர் மற்றும் நம்பியார் ஆகியோரின் குரல்களிலும் பேசி அஞ்சலி செலுத்தினர். தங்களது அபிமான கலைஞரின் குரலில் பேசி பலகுரல் கலைஞர்கள் அஞ்சலி செலுத்தியது அங்கு கூடியிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.



இதில் மிமிக்ரி கலைஞர்கள் கோவை குணா, சென்னை கிரி, கோவை குமார், கோவை கணேஷ், ஈரோடு அன்பு, ஈரோடு சீனி, ஈரோடு ரவிச்சந்திரன், கோவை குரு உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...