உடுமலை அருகே கூட்டாற்றில் பாலம் கட்டித்தர வேண்டும் - மலைவாழ் மக்கள் கோரிக்கை!

உடுமலை அருகேயுள்ள தளிஞ்சி மலைவாழ் மக்கள், ரேஷன் பொருட்கள் வாங்க கூட்டாற்றை கடக்க வேண்டியுள்ள நிலையில், மழைக்காலங்களில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக கூறும் அப்பகுதி மக்கள், கூட்டாற்றின் குறுக்கே பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள கூட்டாற்றி பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



உடுமலை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் அமராவதி வனச்சரகத்துக்கு உட்பட்டது தளிஞ்சி மலைவாழ் குடியிருப்பு. இந்த பகுதியில் 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.



இரு மலைகளுக்கு இடையில் உள்ள சமவெளியில் மலைவாழ் மக்கள் வீடுகள் கட்டி, விவசாய சாகுபடிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் ரேஷன் கடை வசதி இல்லாததால், ரேஷன் பொருட்களை வாங்க சின்னாறு செக் போஸ்ட் பகுதிக்கு வாரத்தில் ஒரு நாள் தளிஞ்சி கிராம மக்கள் வர வேண்டி உள்ளது.

சின்னாறு வரை கரடு முரடான பாறைகள் நிறைந்த ஆறு கிலோமீட்டர் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மண் பாதையில் பயணிக்க வேண்டும்.



வழித்தடத்தில் கூட்டாறு ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்படாததால் மழை காலங்களில் ஆற்றை கடக்க முடியாத நிலை இருந்து வருகிறது.

இதனால் ரேஷன் பொருட்களை வாங்க பொதுமக்கள் பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று, கூட்டாற்றை கடக்க முடியாமல் குடியிருப்புக்கு செல்ல வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் கேரள வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சம்பக்காடு சென்று அங்கிருந்து பஸ் பிடித்து சின்னாறு ரேஷன் கடைக்கு வர வேண்டி உள்ளது.

பல்வேறு இடையூறுகளை சந்திக்க வேண்டியிருப்பதால் ரேஷன் பொருட்களை பெற முடியாமல் தளிஞ்சி கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக கூட்டாற்றின் குறுக்கே, பாலம் கட்ட வேண்டும் என்றும், ரேஷன் பொருட்கள் சீராக விநியோகிக்க வேண்டும் எனவும், அதிகாரிகளிடம் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படாததால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் களஆய்வு மேற்கொண்டு அந்த பகுதியில் பாலம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...