உடுமலையில் கால்நடை பல்கலைக்கழக கட்டிடத்தைத் திறக்க கோரிக்கை!

உடுமலை அருகே குடிமங்கலம் பண்ணைகிணறு ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மைய கட்டிடத்தை விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் பண்ணை கிணறு ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மைய கட்டிடத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயத்துடன் இணைந்த தொழிலாகக் கால்நடை வளர்ப்பு நடைபெற்று வருகிறது. கடந்த ஆட்சியின்போது குடிமங்கலம் ஒன்றியம் பண்ணைகிணறு ஊராட்சியில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தற்போது சுமார் ரூ.260 கோடியில் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மைய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மைய கட்டிடங்கள் கட்டுமான பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ள நிலையில் கால்நடை பல்கலைக்கழகத்தில் பயிலும், மாணவர்களுக்கான வகுப்புகள் உடுமலையில் உள்ள தனியார் பள்ளியில் தற்காலிகமாக நடைபெற்று வருகிறது.

பண்ணைகிணறு ஊராட்சியில் அனைத்து விதமான வசதிகளுடன் ஆய்வகங்களுடன் கட்டிடம் கட்டப்படுகிறது. கட்டுமான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதால், பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் எனப்பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...