முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா- கிணத்துக்கடவு அதிமுகவினர் கொண்டாட்டம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை கோவை கிணத்துக்கடவு பகுதியில் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். எம்.எல்.ஏ தாமோதரன் கலந்து கொண்டு தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.


கோவை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75 வது பிறந்தநாள் விழா இன்று அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் முன்பு நகர அதிமுக சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.



நகர கழக செயலாளர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பழைய பேருந்து நிலையம் பகுதியில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தமோதரன் மலர் தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.



இதேபோல், கிணத்துக்கடவு காய்கறி சந்தை முன்பு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் எம்.எல்.ஏ தாமோதரன் கலந்து கொண்டு தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, வடபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி நகரில் அதிமுக கிளைக் கழக செயலாளர் சிவலிங்கம் தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செய்யப்பட்டது.



பின்னர் 400 பேருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இந்த பிறந்த நாள் விழாவில் அதிமுக நிர்வாகிகளான கண்ணம்மாள், தங்கராஜ், லட்சுமணன், கோபால், வினு, மாரிமுத்து, நடராஜ், வெள்ளிங்கிரி, முருகேஷ், சிவா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...