தாராபுரத்தில் முதியவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி - ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அம்மாபட்டி கிராமத்தை சேர்ந்த முதியவர் முருகசாமி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடும்பத்துடன் தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். வீடு வரைபட அனுமதிக்காக, அதிகாரிகள் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு 65 வயது நிரம்பிய முதியவர் ஒருவர் குடும்பத்துடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், தனது கோரிக்கைகளை அரசு அதிகாரிகள் நிறைவேற்றாவிட்டால் தீக்குளிக்கப் போவதாக கூறிக் கொண்டிருப்பதாகவும் தாராபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.



அதன்படி, அங்கு சென்ற தாராபுரம் போலீசார், அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகசாமி (வயது65) என்ற நபர் தனது மகள் பூமதி (வயது32) உறவினர் பகவதி அம்மாள் (வயது62) ஆகியோருடன் ஊராட்சி ஒன்றிய அலுவலக முகப்பு பகுதியில் கைகளில் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளரின் செயல்களை கண்டிப்பதாக கூறி எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் பிடித்தவாறு தரையிலமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.



அப்போது, திடீரென துணிபையில் இருந்து மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்த முதியவர், தனது தலை மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார்.



சம்பவத்தை பார்த்த போலீசார் கண்ணிமைக்கும் நேரத்தில் விரைந்து சென்று முதியவரின்செயலை தடுத்து நிறுத்தி அவரை அழைத்துச் சென்று தலையில் தண்ணீரை ஊற்றி கழுவச் செய்தனர். பின்னர் அவரிடம் தீக்குளிக்கும் முயற்சிக்கான காரணம் குறித்து கேட்கப்பட்டது.



அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதியவர் முருகசாமி, " தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மாபட்டி கிராமத்தில் தனது தோட்டத்தில் விவசாயம் செய்து கொண்டு பிழைப்பு நடத்தி வருவதாகவும், சாலையோரம் உள்ள தனக்கு சொந்தமான இடத்தில் ஒரு வீடு கட்டுவதற்காக கவுண்டச்சி புதூர் ஊராட்சி தலைவர் செல்வி, ஊராட்சி செயலாளர் ஆகியோரை அணுகி வரைபடம் வழங்க கோரி அனுமதி கேட்டபோது தன்னை பலமுறை அலைக்கழித்ததுடன் 1 லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுத்தால் மட்டுமே வரைபட அனுமதி வழங்க முடியும் எனக்கூறி தனது கோரிக்கையை புறக்கணித்து தொடர்ந்து அலைக்கழித்து வருவதாக கூறினார்.

எனது சொந்த இடத்தில் சிறிய வீடு கட்டுவதற்கு ஒரு லட்ச ரூபாய் பணம் கேட்டால் நான் எங்கே போவது? ஊர் முழுவதும் லஞ்சப் பணமாக வாங்கி தாராபுரத்தில் பல இடங்களில் வீடுகளைக் கட்டி வரும் இவர்கள் மீது யாருமே நடவடிக்கை எடுக்க மாட்டார்களா? எங்களைப் போன்ற ஏழை விவசாயிகளிடம் 50ஆயிரம், ஒரு லட்சம் என வரைபடம் அனுமதி வழங்குவதற்கு லஞ்சம் கேட்டால் நாங்கள் என்ன செய்வோம்? எனக்கு சொந்தமான இடத்தில் எனது பணத்தில் நான் வீடு கட்ட இவர்களுக்கு எதற்காக பணம் கொடுக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பிய முதியவர், இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், கவுண்டச்சி புதூர் ஊராட்சி தலைவர் செல்வியை செல்போனில் தொடர்பு கொண்டு, சம்பவம் குறித்து தகவல் கூறி விரைந்து வந்து முதியவரை சமாதானம் செய்ய கூறினர். ஆனால், தன்னால் உடனடியாக வர முடியாது அரை மணி நேரத்திற்கு மேல் தாமதமாகும் என பொறுப்பற்ற முறையில் அவர் பதில் கூறியுதாகத் தெரிகிறது. மக்கள் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய ஒரு மக்கள் பிரதிநிதி, குடும்பத்துடன் தற்கொலை செய்ய முயன்ற முதியவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபடாமல் பொறுப்பற்ற முறையில் பதில் கூறியது அங்கிருந்த பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...