உடுமலை, மடத்துக்குளத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம் - உருவப் படத்திற்கு மலர் மரியாதை!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை ஒட்டி, திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.



மத்திய பேருந்து நிலையம்முன் வாரச்சந்தை பகுதியில் அலங்கரிக்கபட்ட ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு நகரசெயலாளர் ஹக்கிம் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



பின்னர், பொதுமக்கள் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் பழக்கடை கார்த்தி வழக்கறிஞர் கண்ணன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் வனிதா மணி, மளிகை செல்வம், அண்ணா தொழிற்சங்கம் துபாய் ஆறுமுகம், தொழிற்சங்கம் சந்தை வேலாயுதம், சரவணன் உடுமலை நகர அதிமுக நிர்வாகிகள் வாரச்சந்தை அண்ணா தொழிற்சங்கம் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட சார்பு மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



இதேபோல், மடத்துக்குளம் நால்ரோடு பகுதியில் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் அறிவுறுத்தல்படி பேரூர் கழக செயலாளர் நிலம்பூர் செல்வராஜ் தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட அவரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் மடத்துக்குளம் பேரூர் கழக நிர்வாகிகள், சார்பணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...