கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு - உதகை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, தொலை தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து பல்வேறு தகவல்கள் சேகரிக்க வேண்டியுள்ளதால் சிபிசிஐடி தரப்பில் காலஅவகாசம் கேட்கப்பட்டதால், விசாரணையை மார்ச் 21ம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ந்தேதி கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அப்போது, இரவு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் கேரளாவை சேர்ந்த சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டனர். முதல் குற்றவாளியான கனகராஜ் சேலம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார்.

இதனையடுத்து, சயான் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு தற்போது அனைவரும் ஜாமீனில் உள்ளனர். இந்நிலையில் கடந்த 5 ஆண்டு காலமாக இந்த வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது.தற்போதுஇந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். மேலும், சிபிசிஐடி போலிசார் தரப்பில்விசாரணை அதிகாரி ஏடிஎஸ்பி முருகவேல், டிஎஸ்பிக்கள் சந்திரசேகர், அண்ணாதுரைஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பில் வாளையாறு மனோஜ் மட்டுமே ஆஜராகினர்.

விசாரணையின்போது சிபிசிஐடி தரப்பில், இதுவரை 103 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளதாகவும், தொலை தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து பல்வேறு தகவல்கள் சேகரிக்க வேண்டியுள்ளதால் கால அவகாசம் அளிக்க வேண்டுமென கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை மார்ச் 21-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Newsletter

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...