கடும் அமளி காரணமாக சட்டப்பேரவை ஒத்திவைப்பு!


பெரும்பாண்மையை நிரூபிக்க  சட்டப்பேரவை கூடுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இன்று சட்டப்பேரவையில் கூடினர். தொடர்ந்து, பன்னீர் செல்வம் அணியினரும், எதிர்க்கட்சியான தி.மு.க  மற்றும் காங்கிரஸ் கூட்டணி எம்.எல்.ஏ.க்களும் இன்று சட்டமன்றத்த்க்ல் கூடினர். காலை 11 மணியளவில் தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தில் தொடக்கம் முதலே எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டு வந்தனர். ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், வேறு ஒரு நாளில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தி.மு.க., காங்கிரஸ், மற்றும் பன்னீர் செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முன் வைத்தனர். ஆனால், வாக்கெட்டுப்பு எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை சபா நாயகர் முடிவு செய்வார் என்றும், தனது இந்த முடிவில் தலையிட யாருக்கு அதிகாரம் இல்லை என்றும் சபா நாயகர் தனபால் கூறினார். இதை தொடர்ந்து சட்டப்பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது. 

இதை எதிர்த்த சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கைகளை தட்டியும், மேசைகள் மீது ஏறியும், சபா நாயகரின் மைக்கை உடைத்தும் அமளியில் ஈடுபட்டனர். இந்த கடும் அமளி காரணமாக சபையை 45 நிமிடங்கள் ஒத்திவைத்து சபா நாயகர் தனபால் உத்தரவிட்டார். இதனால், மதியம் 1 மணி வரை சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...