தாராபுரத்தில் அரசு குடியிருப்புவாசிகள் சாலைமறியல் போராட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள அரசு ஊழியர்கள் குடியிருப்பில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அங்கு வாடகைக்கு குடியிருக்கும் மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தாராபுரம் -உடுமலை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



திருப்பூர்: தாராபுரம் உடுமலை சாலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அரசு ஊழியர்கள் வாடகை குடியிருப்பில் உள்ள சுமார் 80க்கும் மேற்பட்ட வீடுகளில்சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

அந்த குடியிருப்பு பகுதியில் சாக்கடை வசதி குடிநீர் வசதி தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி எதுவும் செய்து தராமல் வீட்டு வசதி வாரியத்தினர் மாதந்தோறும் பல்லாயிரக்கணக்கான ரூபாயை சம்பளத்தில் வாடகையாக ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்து வருகின்றனர்.



கடந்த 10 ஆண்டு காலமாக பராமரிப்பின்றி முட்புதர்கள் மண்டி பாம்பு மற்றும் விஷ கிருமிகள் உள்ளிட்ட பிராணிகள் சுற்றித் திரிகின்றன. இதனால் அப்பகுதியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரவு நேரங்களில் வெளியில் நடமாட முடியாமல் பெரும் சிரமப்பட்டுவருகின்றனர்.

இதற்கு தீர்வு காணக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த 2019 ஆண்டு முதல் வீட்டு வசதி வாரியத்திற்கு பலமுறை புகார் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் ஈரோடு வீட்டு வசதி வாரியத்தினர் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.



இதனால் அதிருப்தி அடைந்த குடியிருப்பு வாசிகள், குடிநீர் ஆழ்குழாய் கிணறு பழுதடைந்து இருப்பதை சரி செய்ய கோரி தாராபுரம் உடுமலை சாலையில் சாலை மறியல் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் 24வது வார்டு கவுன்சிலர் உமாமகேஸ்வரி ஹரிஹரன், நகராட்சி பொறியாளர் மற்றும் துறை அலுவலர்கள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.



அப்போது நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் கூறுகையில், வீட்டு வசதி வாரிய குடியிருப்புமுழுக்க முழுக்க வீட்டு வசதி வாரிய கட்டுப்பாடில் இருந்து வருகிறது. இப்பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும். இதனை சரிவர பராமரிக்காமல் விட்டுவிட்டனர். இதனால்தான் இப்பகுதியில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் சார்பில் அப்பகுதிமக்களுக்குதேவையானகுடிநீர் தங்குதடையின்றிவழங்கப்படும் என உறுதி அளித்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட மக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலைமறியல் போராட்டத்தால் தாராபுரம் -உடுமலை சாலையில் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவிவயது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...