கோவை சிறுமி பாலியல் வழக்கு - குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை

கோவை மாவட்டம் அன்னூரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான போக்சோ குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தங்கராஜ் (வயது42), கடந்த 2016 ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு கோவை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.



இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்து விசாரணை முடிவுபெற்ற நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், குற்றவாளி தங்கராஜுக்கு 10 ஆண்டு சிறைதண்டனை மற்றும் ரூபாய் 20,000/- அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

மேலும், இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற காவலர் பரசுராமன் ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பாராட்டினார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...