கோவை அருகே சாலையில் கிடந்த பணம் - காவல்நிலையத்தில் ஒப்படைத்த சிறுவர்களுக்கு பாராட்டு

கோவை மாவட்டம் சின்னதடாகம் பகுதியில் சாலையில் கிடந்த பணத்தை எடுத்து காவல்நிலையத்தில் நேர்மையாக ஒப்படைத்த அரசு பள்ளி மாணவர்களான சஷ்வந்த், தர்சன், பிரனவ் ஆகியோருக்கு காவல்துறையினர் பரிசு வழங்கி கவுரவித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சின்னதடாகத்தில் ஊராட்சி ஒன்றிய தொட்டக் கப்பள்ளி உள்ளது. கடந்த 15ந் தேதி மாலை பள்ளி நேரம் முடிந்து மாணவ - மாணவியர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, சாலையில் பணம் ரூபாய் 200 கிடந்துள்ளது.

இதை அவ்வழியாக வந்துகொண்டிருந்த மாணவர்கள் சஷ்வந்த்(வயது9) தர்சன் (வயது9) பிரனவ் மற்றும் ஆண்கள் அரசு மேல்நிலை பள்ளி மாணவர் கௌதம் ஆகியோர் பார்த்தனர். அந்தப் பணத்தை எடுத்து தடாகம் காவல் நிலையத்தில் அவர்கள் ஒப்படைத்தனர்.

சாலைலியல் கீழே கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த மாணவர்களின் நேர்மையைப் பாராட்டும் விதமாக நேற்று அவர்களை காவல் நிலையத்திற்குவரவழைத்து சப்இன்ஸ்பெக்டர் ஆறுமுக நயினார் மற்றும் காவலர்கள் சிறப்பு பரிசு வழங்கி பாராட்டினர்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...