கோவையில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

கோவை மண்டல நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கத்தினர் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு, பதவி உயர்வு, சேமநல நிதி, பணி செய்வதற்கான உபகரணங்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கோவையில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மண்டல தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் சார்பில், கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோட்ட தலைவர் முருகேசன் தலைமையில்நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சாலைப் பணியாளர்களின் ஒட்டுமொத்த முதுநிலை பட்டியலை சார்நிலை பணியமைப்பு விதிகள் அடிப்படையில் முறைப்படுத்த வேண்டும்.

தகுதி வாய்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். சாலை பணியாளர்கள் சாலை பராமரிப்பு பணி மேற்கொள்ள கருவி, தளவாடம், பொருட்களை கடத்தி செல்ல மின்சார வண்டி வழங்க வேண்டும்.

சாலை பணியாளர்களின் பொது சேமநல நிதிக்கென பிடித்தம் செய்து, கணக்கில் சேர்க்கப்படாமல் தவறிய தவணைகளை கணக்கில் சேர்க்க வேண்டும். அன்னூர் சாலை பணியாளர்களின் முறைப்படுத்தப்படாத நாட்களை முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.



மேலும், கோவை கோட்ட பொறியாளர் சுந்தரமூர்த்தி மற்றும் நிர்வாக அலுவலர் பீரான் அரசு ஆகியோர், விதிமீறல் ஈடுபட்டுள்ளதாக கூறி அவர்களை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானசங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...