கோவை ஆர்.டி.ஓ ஆய்வு - ஆவணங்கள் இல்லாத 50 வாகனங்கள் பறிமுதல்!

கோவையில் போக்குவரத்து காவல்துறையினர் நடத்திய அதிரடி ஆய்வில் சாலைவரி செலுத்தாதது, வாகன அனுமதி புதுப்பிக்காதது, தகுதிச்சான்று இல்லாமலும், அதை புதுப்பிக்காமலும் வாகனங்களை இயக்கியது உள்ளிட்ட காரணங்களுக்காக 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


கோவை: கோவை சரக போக்குவரத்துத் துறையின் கீழ், கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த மூன்று மாவட்டங்களிலும் ஒரு குறிப்பிட்ட நாளில், சுழற்சி முறையில் வெவ்வேறு பகுதிகளிலும் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படும். அதன்படி, கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், நேற்று முன் தினம் இரவில் இந்த அதிரடி ஆய்வு நடத்தப்பட்டது.

திருச்சி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, நஞ்சுண்டாபுரம் ரோடு, வாலாங்குளம் ரோடு மற்றும் சூலுார் ஆகிய பகுதிகளில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், ஏராளமான வாகனங்களை மடக்கி இந்த ஆய்வை மேற்கொண்டனர். இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த ஆய்வில், மொத்தம் 347 வாகனங்கள் சோதனையிடப்பட்டன.

அப்போது, சாலைவரி செலுத்தாதது, வாகன அனுமதி புதுப்பிக்காதது, தகுதிச்சான்று இல்லாமலும், அதை புதுப்பிக்காமலும் வாகனங்களை இயக்கியது உள்ளிட்ட காரணங்களுக்காக 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மொத்தம் ஆறு லட்ச ரூபாய்க்கு மேல் அபராதமும் விதிக்கப்பட்டது. வாகனங்களுக்குச் செலுத்த வேண்டிய வரி, காப்பீடு, பர்மிட், தகுதிச்சான்றுகளைப் புதுப்பித்து ஆவணங்களை வைத்திருக்க வேண்டுமென்று வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இது குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'இதுபோன்று தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளுமாறு, கோவை சரக போக்குவரத்துத்துறை இணை கமிஷனர் சிவக்குமரன் அறிவுறுத்தியுள்ளார். அன்றாடப்பணிகளில் பாதிப்புகள் ஏதுமின்றி தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.

இதன் வாயிலாக, வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதுடன் விபத்துகள் தவிர்க்கப்படும். அரசுக்கும் வருவாய் கிடைக்கும் என்றனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...