கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் - பொய் வழக்கை திரும்பப்பெற கோரிக்கை!

கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்களின் ஆணையை திரும்ப பெற வேண்டும், மாணவர்கள் மீதான புகாரை விசாரிக்கும், 'விசாரணை குழுவில்' மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.



கோவை: கோவை அரசு சட்ட கல்லூரியில் எல்.எல்.எம். ஹரிதா என்ற மாணவி கல்லூரியில் சேரும் பொழுது யூ.ஜி. சான்றிதழ் கொடுத்ததாகவும் அதை காணவில்லை என்று கல்லூரி சார்பாக கடந்த மாதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து, அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் சேக் முகம்து கல்லூரியில் சென்று கல்லூரி ஊழியர்களை தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில், கல்லூரி ஊழியர்கள் முதல்வரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். அதன்பேரில், வடவள்ளி காவல் நிலையத்தில் கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் கொடுத்த புகாரில், ஷேக் முகமது மற்றும் ஹாரிதா மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து, இருவரையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.



மேலும், காரணம் இல்லாமல் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் தரணிஸ் என்ற மாணவனை சஸ்பெண்ட் செய்வதாக கூறப்படுகிறது. இதனை கண்டிக்கும் விதமாக, சட்டக் கல்லூரி வளாகத்தில் முன்பு மாணவர்கள் கூடி முதல்வரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது, மாணவர்கள் மீதான பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும், காரணம் இல்லாமல் இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்களின் ஆணையை திரும்ப பெற வேண்டும், மாணவர்கள் மீதான புகாரை விசாரிக்கும், 'விசாரணை குழுவில்' மாணவர்கள் சார்பாக மாணவர்கள் இருக்க வேண்டும்,

இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள் மீது இதைக் காரணம் காட்டி எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

அதை தொடர்ந்து கல்லூரி முதல்வர் மாணவர்களிடம் சமரசப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை கடிதமாக எழுதி அதில் முதல்வர் கையொழுத்துபோட்டுக் கொடுக்கும் பட்சத்தில் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

LPF and Affiliated Unions Protest in Coimbatore Against Centre and State Governments’ Labour Policies

The Coimbatore District Labour Progressive Federation (LPF) Council and affiliated unions staged a protest near the Red...

EPFO Wage Ceiling Revision: Coimbatore Officials Explain Benefits for Formal Sector Employees

The Union Cabinet’s decision to raise the EPFO mandatory coverage wage ceiling from ₹15,000 to ₹25,000, effective Septem...

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி ம...

கோவையில் கைவினைஞர் தனித்தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

2027 ஜூலை மாதம் DGT நடத்தும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள விரும்புவோர்...

மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (23.09.2026) காலை 9 மணி முதல் மதியம் 2 மண...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி முதல...