இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவனுக்கு விருது - பொள்ளாச்சி ரோட்டரி சங்கம் கவுரவிப்பு

பொள்ளாச்சி ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த விழாவில், இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவனுக்கு கௌரவ விருது வழங்கப்பட்டது. விண்வெளி மற்றும் தொழில்நுட்பத் துறையில் நான்கு தலைமுறைகளாக முழுமையான பங்களிப்பை வழங்கி, முன்னுதாரணமான சேவையை பாராட்டி விருது வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கத்தில் ரோட்டரி சங்கத்தின் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் புகழ்பெற்ற விஞ்ஞானியும், இஸ்ரோ முன்னாள் தலைவரும், தற்போது விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் புகழ்பெற்ற பேராசிரியருமான முனைவர் சிவனுக்கு, விண்வெளி மற்றும் தொழில்நுட்பத் துறையில் நான்கு தலைமுறைகளாக முழுமையான பங்களிப்பை வழங்கி, முன்னுதாரணமான சேவையை வழங்கி வருவதைப் பாராட்டி, கவுரவ(For the sake of honour 2022-2023 Award) விருது வழங்கப்பட்டது.

விழாவில் பேசிய முனைவர் சிவன், தம்முடைய விஞ்ஞானப் பயணம் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் குறித்தும், தேசத்திற்குப் பங்களிக்கும் ரோட்டரி சங்கம் குறித்தும் உற்சாகம் மற்றும் எழுச்சியூட்டும் வகையில் உரையாற்றினார்.

தொடர்ந்து பேசிய அவர், பொள்ளாச்சியில் உள்ள மாணவர்கள் குறிப்பாக விண்வெளி உள்கட்டமைப்புத் துறையில் தொழில்முனைவோராக மாற வேண்டும். விண்வெளி நடவடிக்கைகளுக்கு பொள்ளாச்சி ஒரு முக்கிய மையமாக எதிர்காலத்தில் உருவாக வேண்டும். இந்த கவுரவ விருதை இஸ்ரோவில் உள்ள குழுவினருக்கு அர்ப்பணிக்கிறேன். எனது சாதனைகள் அனைத்தும் எனது குழுவால் சாத்தியமானது.

இந்த நாட்டை உலகத்தின் முன்னணி நாடாக மாற்ற பல்வேறு துறைகளில் பிரதமர் எடுத்துள்ள முயற்சிகளால் இந்தியாவில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. கல்வி- ஸ்டார்ட் அப் -தொழில் ஆகியவற்றின் சூழலை துடிப்பானதாக மாற்றுவதற்கு இந்திய அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது. இந்த சூழல் உண்மையில் தொழில்முனைவோருக்கு உகந்த ஒன்று.

எனவே, மாணவர்கள் வேலைவாய்ப்பை தேடிச்செல்பவர்களாக இருப்பதை விட தொழில்முனைவோராக மாற முயல வேண்டும். விண்வெளி உள்கட்டமைப்பு சந்தையில் கால் பதிக்க வேண்டும். ஏனெனில், இதில் நாட்டிற்கும் புதுமையான தீர்வு வழங்குபவர்களுக்கும் முன்னேற்றத்தை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.

இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், லெப்டினன்ட் ஜெனரல் நரசிம்மன், ரோட்டரியின் தொழில்சார் சேவை இயக்குனர் சி.எம். ஹரிராஜ், ரோட்டேரியன் ஜி.டி. கோபாலகிருஷ்ணன் தலைவர் பி.டி.எஸ் மகேஷ்வர், செயலாளர் எஸ்.லோகேஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...