முக்திக்கான பாதையின் வழிகாட்டியாக திகழ்கிறார் சிவன் - மஹா சிவராத்திரி விழாவில் குடியரசு தலைவர் புகழாரம்!

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மஹா சிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, முக்திக்கான பாதையின் வழிகாட்டியாக சிவன் திகழ்வதாக கூறினார்.


கோவை: முக்திக்கான பாதையின் வழிகாட்டியாக சிவன் திகழ்வதாக கோவை ஈஷா சிவராத்திரி விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு புகழாரம் சூட்டினார்.

கோவை ஈஷா யோகா மையத்தில் சத்குரு முன்னிலையில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக குடியரசு தலைவர். திரெளபதி முர்மு கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பேசியதாவது,

சிவனாக இருக்கும் அனைத்திற்கும் நான் தலை வணங்குகிறேன். ஆதியோகி முன்னிலையில் நடைபெறும் இந்த புனித மஹா சிவராத்திரி விழாவில் பங்கேற்றதை ஆசிர்வதிக்கப்பட்டதாய் உணர்கிறேன். உலகிலுள்ள பல்வேறு கலாச்சாரங்கள், பக்தி மற்றும் ஞானத்தின் பாதை குறித்து பேசுகின்றன.

அவை அனைத்திற்குமான மூர்த்தியாக சிவன் விளங்குகிறார். அவர் குடும்ப வாழ்க்கையிலும் இருக்கிறார். அதே வேளையில் சந்நியாசியாகவும் இருக்கிறார். அவர் தான் இந்த உலகின் முதல் யோகி மற்றும் முதல் ஞானி. சிவன் கருணை கடவுளாகவும், ஆக்ரோஷமான வடிவமாகவும் இருக்கிறார். முக்திக்கான பாதையின் வழிகாட்டியாகவும் சிவன் விளங்குகிறார். ஆக்கும் மற்றும் அழிக்கும் சக்திகளில் ஒன்றிணைந்த குறியீடாகவும் இருக்கிறார்.

அறியாமை எனும் இருளின் முடிவாகவும், ஞான பாதையின் திறப்பாகவும் மகா சிவராத்திரி விளங்குகிறது. வாழ்வின் உயரிய தேடல்களை கொண்டவர்களுக்கு இந்நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

நவீன காலத்தின் போற்ற தக்க ரிஷியாக விளங்கும் சத்குரு ஜக்கி வாசுதேவ், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் நம்முடைய ஆன்மீக அம்சங்களை எண்ணிலடங்கா மக்களுக்கு கொண்டு சேர்த்துள்ளார். குறிப்பாக ஏராளமான இளைஞர்களை ஆன்மீக பாதையில் ஈர்க்கும் யோகியாகவும் இருக்கிறார்.

அவருடைய பேச்சு மற்றும் செயல்கள் மூலம் ஆன்மீகம் மட்டுமின்றி சமூக பொறுப்புணர்வையும் கற்றுக் கொடுக்கிறார். சுற்றுச்சூழல் சார்ந்த பல பணிகளையும் அவர் முன்னெடுத்துள்ளார். இந்த மஹா சிவராத்திரி நன்நாள் நமக்குள் இருக்கும் இருளை அகற்றட்டும். மேலும் வளர்ச்சியும் நிறைவும் நிறைந்த வாழ்வை நமக்களிக்கட்டும். இந்த மஹா சிவராத்திரியின் நல்லொளி நம் ஒவ்வொரு நாளின் பாதையையும் பிரகாசமாக்கட்டும்.

இவ்வாறு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பேசினார்.



இவ்விழாவில் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசியதாவது, மகா சிவராத்திரி விழாவிற்கு வருகை தந்துள்ள குடியரசு தலைவருக்கு எங்கள் ஆத்மார்த்தமான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

மஹா சிவராத்திரி தினமானது சொர்க்கத்துக்கு செல்வதற்கான நாளல்ல. எந்தவித சித்தாந்தம் மற்றும் நம்பிக்கையையும் கொடுக்கும் நாளும் அல்ல. உங்களுக்குள் உண்மைக்கான தேடுதலை தீவிரப்படுத்தும் நாள். நம்முடைய பாரத தேசத்தில் 50 கி.மீ பயணித்தாலே அங்கு வாழும் மக்களின் உணவு பழக்கம், பண்பாடு போன்றவை வேறுபடுகின்றன.

மொழி, இனம், ஜாதி, கலாச்சாரம் போன்ற ஏராளமான முறைகளில் நாம் ஒருவருக்கொருவர் வேறுபட்டிருந்தாலும் நம்மை வெளிநாட்டவர்கள் ஒற்றை தேசத்தின் மக்களாகவே பார்க்கின்றனர். அதற்கு மிக முக்கிய காரணம் நாம் வாழ்நாள் முழுவதும் உண்மையை தேடும் தேடல்மிக்கவர்களாக இருக்கிறோம்.

நம்பிக்கையாளர்களாக அல்ல. எந்த பிரச்சனைகளின் போதும் நாம் முடிவுகளை தேடி செல்பவராக இல்லாமல், தீர்வு காணும் தேடல் மிக்கவர்களாக இருக்கிறோம். இந்த தேடலை இந்த மஹா சிவராத்திரி நாளில் மேலும் தீவிரப்படுத்துங்கள்

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, மாலை 6 மணியளவில் ஈஷா யோகா மையத்திற்கு வருகை தந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சத்குரு ஜக்கி வாசுதேவ் வரவேற்றார். பின்னர் அவர் ஈஷா மையத்திலுள்ள பல்வேறு இடங்களுக்கு உடன் அழைத்து சென்று அவ்விடங்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.



சூர்ய குண்டம், நாகா சன்னதி ஆகிய இடங்களுக்கு சென்று வழிபட்ட குடியரசு தலைவர் நந்திக்கு தாமரையை அர்ப்பணித்தார். இதைத் தொடர்ந்து லிங்க பைரவி கோவிலுக்கு சென்று தாக நிவாரணம் உள்ளிட்ட அர்ப்பணங்களை செய்தார். பின்னர் தியானலிங்கத்தில் நடைபெற்ற பஞ்சபூத க்ரியையில் பங்கேற்றார்.

இவ்விழாவில் குடியரசு தலைவருடன் தமிழ்நாடு ஆளுநர் R.N.ரவி, தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோரும் பங்கேற்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...