தெலுங்கான அரசும் கோவை பிஎஸ்ஜி கல்விக்குழுமமும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது

பிஎஸ்ஜி கல்விக் குழுமமும், தெலுங்கானா அரசும் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. தெலுங்கானா அரசின் கைத்தறி மற்றும் ஜவுலித் துறை இயக்குநர் சைலஜா ராம் ஐயர் மற்றும் பிஎஸ்ஜி கல்விக் குழுமத்தின் நிர்வாக அரங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அப்பொழுது, தெலுங்கானா அரசின் ஐடி துறை அமைச்சரான ராமாராவ், தெலுங்கானா அரசின் ஐடி அமைச்சரவை செயலாளர் ஜெயஸ் ரஞ்சன், பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஆர்.ருத்ரமூர்த்தி மற்றும் பிஎஸ்ஜி ஐஎம் கல்லூரியின் இயக்குநர் முனைவர் ஆர்.நந்தகோபால் ஆகியோர் உடனிருந்தனர்.



இந்நிகழ்வில், தெலுங்கானா மாநிலத்தின் ஐடி துறை அமைச்சர் ராமாராவ் பேசும்போது, இந்த ஒப்பந்தமானது தெலுங்கானா மாநிலத்தில் ஒரு பலமான மனித வளத்தினை உருவாக்குவதற்காக செய்துகொள்ளப்பட்டது.

தெலுங்கானா மாநில அரசு ஜவுளித் துறையினன் வளர்ச்சிக்காக மிகப்பெரிய ஜவுளிப் பூங்காவினை அம்மாநிலத்தில் அமைத்து வருகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் பிஎஸ்ஜி கல்லூரியில் தெலுங்கானா மாநில அரசும் ஜவுளிப் பூங்காவினை உருவாக்குவதற்கான செயல்களை இணைந்து செய்யவுள்ளது.

பிஎஸ்ஜி கல்லூரி தொழில்நுட்ப மற்றும் திறன்மேம்பாடு, தொழில்முனைவோர் வளர்ச்சி மற்றும் பயிற்சி, ஆராய்ச்சி மற்றும அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு மற்றும் நிர்வாகவியல் வளர்ச்சித் திட்டங்களை தெலுங்கானா அரசுடன் இணைந்து செயல்படுத்தும். இதற்குத் தேவைப்பபடும் நிதியை தெலுங்கானா அரசு இக்ககல்லூரிக்கு வழங்கும். 



வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் ஜவுளி மற்றும் ஆயத்தஆடை துறை மிகுந்த பங்கு வகிக்கிறது. 60 சதவிகித இந்திய மக்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டள்ளனர். ஆனால் அதில் 15 முதல் 17 சதவிகிதம் உடைய மக்களே பொருளாதாரத்தில் பங்களைப்பை அளிக்கின்றனர். அதனால் தெலுங்கானா மாநிலத்தின் முதலமைச்சர் கிராமப் புர பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் முனைப்போடு உள்ளார். கிராமப்புர மக்களின் பொருளாதாரத்திலம் அவர்களுக்கான வேலைவாய்ப்புகளையும் பெருக்க மிகப்பெரிய ஜவுளி பூங்கா அமைக்க தெலுங்கானா அரமு முடிவு செய்துள்ளது. தெலுங்கானா மாநிலம் பருத்தி உற்பத்தியில் முன்னணி மாநிலமாக விளங்குகிறது. அதனால் அணைத்து விதமான ஆடை உற்பத்தியாளர்களுககும் இந்த புதிய ஜவுளிப் பூங்கா ஒரு முக்கியமான அடித்தளமாக இருக்கும்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...