கோவையிலிருந்து கொலை குற்றவாளிகள் தப்பிக்காமல் இருக்க நடவடிக்கை - மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் உறுதி!

கோவை மாநகரில் நடைபெற்ற அடுத்தடுத்த படுகொலை சம்பவங்கள் தொடர்பாகக் குற்றவாளிகள் வெளியூர்களுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க மாவட்ட எல்லையோரத்தில் உள்ள 13 சோதனை சாவடிகளிலும் தீவிர வாகன தணிக்கை நடைபெற்று வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவையில் டிராவல் ஏஜென்சி நடத்தி சுமார் 3.50 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபரை கைது செய்து அவரிடம் இருந்து 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான 11 வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.

கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,



கடந்த 2019 ஆம் ஆண்டு கவுண்டம்பாளையம் பகுதியில் தேனியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் விஜிஎம் டிராவல்ஸ் என்ற பெயரில் போலியாக டிராவல் ஏஜென்சி நிறுவனம் துவங்கி அதன் அடிப்படையில் சொந்தமாக கார் வைத்திருப்பவர்களிடம் மாத வாடகைக்கு கார் எடுத்து, மாதம் பத்தாயிரம் ரூபாய் வாடகை தருவதாக பொய்யான தகவல் கூறி 30-க்கும் மேற்பட்ட கார்களை வாங்கி தலைமறைவாகியுள்ளார்.



இது தொடர்பாக காரின் உரிமையாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்த சூழலில், தற்போது அந்த நபர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 11 கார்கள் மீட்கப்பட்டுள்ளது.



மேலும் 19 கார்கள் விரைவில் மீட்கப்படும்.

வாடிக்கையாளர்களின் கார்களை வாங்கி அந்தக் கார்களுக்கு போலி ஆவணங்களை தயாரித்து வேறு நபர்களுக்கு விற்று வெங்கடேஷ் மோசடியில் ஈடுபட்டுள்ளார். தற்போது அவரை கைது செய்துள்ள நிலையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.

கோவை மாநகரில் நேற்றும், இன்றும் நடைபெற்ற அடுத்தடுத்த படுகொலை சம்பவங்கள் தொடர்பாக குற்றவாளிகள் வெளியூர்களுக்கு தப்பி செல்லாமல் இருக்க மாவட்ட எல்லையோரத்தில் உள்ள 13 சோதனை சாவடிகளிலும் தீவிர வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது.

நாளை கோவை குண்டுவெடிப்பு தினம் அனுசரிக்கப்படும் நிலையில் மாவட்டம் முழுவதும் 34 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு ஏற்கனவே உள்ள போலீசாருடன் ஆயிரம் போலீசார் கூடுதலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மகாசிவராத்திரி விழா வருகிற 18ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் கோவில்களில் மக்கள் அமைதியான முறையில் தரிசனம் செய்ய போதிய ஏற்பாடுகள் செய்யப்படும்.

கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. அதிகளவில் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த கஞ்சா சாக்லேட்டுகள் வடமாநிலத்திலிருந்து கொண்டு வருவது தெரியவந்துள்ளது.

கான்பூரில் கஞ்சா சாக்லேட் தயாரிப்பு நிறுவனம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இதனை முற்றிலும் ஒழிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...