திருப்பூர் உடுமலை அருகே சாலை விரிவாக்க பணி காரணமாக போக்குவரத்து மாற்றம்!

உடுமலை அருகே பொள்ளாச்சி - திண்டுக்கல் சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சாலை விரிவாக்க பணியின் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உடுமலை அருகே பொள்ளாச்சி - திண்டுக்கல் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி துரித கதியில் நடைபெற்று வருகிறது. இந்த வழித்தடத்தில் ஆங்காங்கே நீர்வழித்தடங்களில் மேம்பாலம் அமைக்கின்ற பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பாலங்கள் கட்டும் பணியின் போது தற்காலிக சாலை அமைத்து, அதில் போக்குவரத்து தொடர்ந்து வருகிறது. மடத்துக் குளத்தில் இருந்து கணியூர், காரத்தொழுவு வழித்தடத் தில் வாகன ஓட்டிகள் தாராபுரம், கரூர் மேலும் திருச்சி வரை சென்று வருகின்றனர்.



முக்கிய வழித்தடமாக இந்த சாலையில் சோழமாதேவி மேடு அருகே உயர்மட்ட பாலம் கட்டும் பணியானது வேகமாக நடைபெற்று வருகிறது. பாலம் கட்டும் பணிக்காக அருகிலேயே தற்காலிக சாலை அமைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து தற்காலிக பாதை வழியே சென்று வருகிறது.



இருப்பினும் போக்குவரத்து நெரிசல் இன்றி தொடர மடத்துக்குளம் கழுகரையில் இருந்து பிரிந்து வேடப்பட்டி கிராமம் வழியாக கணியூர், காரத்தொழுவு சென்று செக்கான் ஓடை பகுதியில் மீண்டும் பழைய சாலையில் பயணிக்கும் வகையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

இது குறித்த அறிவிப்பு பலகையை நெடுஞ்சாலை துறையினர் வைத்துள்ளனர். போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் கழுகரையில் பிரிந்து மீண்டும் செக்கான் ஓடை வரை உள்ள மாற்று வழித்தடத்தில் பயணித்து வருகின்றனர்.

Newsletter

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...