ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் இலவசமாக பங்கேற்க ஆன்லைன்‌ முன்பதிவு அவசியம்!‌

கோவையில்‌ நடைபெறும்‌ ஈஷா மஹாசிவராத்திரி விழாவில்‌ இலவசமாக பங்கேற்க விரும்பும்‌ பக்தர்கள்‌ ஆன்லைனில்‌ முன்பதிவு செய்து கொள்ளலாம்‌ என ஈஷா நிர்வாகம் தெரிவித்துள்ளது.



கோவை: ஈஷா மஹா சிவராத்திரி விழாவில் இலவசமாக பங்கேற்பதற்கு ஆன்லைன்‌ முன்பதிவு அவசியம்‌ என ஈஷா மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'தென்‌ கயிலாயம்‌' என அழைக்கப்படும்‌ வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில்‌ அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில்‌ மஹா சிவராத்திரி விழா ஆண்டுதோறும்‌ மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு மஹா சிவராத்திரி விழா பிப்ரவரி 18-ம்‌ தேதி மாலை 6 மணி முதல்‌ மறுநாள்‌ காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு மிகச்‌ சிறப்பாக நடைபெற உள்ளது.

இவ்விழாவில்‌ நேரில்‌ கலந்து கொள்ள விரும்பும்‌ பக்தர்கள்‌ https://isha.co/msr23-tn என்ற லிங்கை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்‌. இலவசமாக பங்கேற்க விரும்புபவர்கள்‌ 'தாமிரபரணி' என்ற பிரிவை தேர்வு செய்து பெயர்‌, அலைபேசி எண்‌, இ-மெயில்‌ முகவரி ஆகியவற்றை பதிவிட்டு முன்பதிவு செய்ய வேண்டும்‌. முதலில்‌ வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில்‌ இந்த முன்பதிவு நடைபெறும்‌.

வெற்றிகரமாக முன்பதிவு செய்த பிறகு, விழாவில்‌ பங்கேற்பதற்கான இ-பாஸ்‌ பதிவு செய்தவர்களின்‌ இ-மெயில்‌ முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்‌. பிப்ரவரி 18ஆம்‌ தேதி ஈஷாவிற்கு வரும்‌ போது, மலைவாசல்‌ அருகே இருக்கும்‌ நுழைவு சீட்டு வழங்கும்‌ இடத்தில்‌ இந்த இ-பாஸை காண்பித்து நுழைவு சீட்டை பெற்று கொள்ளலாம்‌.

இவ்விழா மாலை 6 மணிக்கு தியான லிங்கத்தில்‌ நிகழ்த்தப்படும்‌ பஞ்சபூத ஆராதனையுடன்‌ தொடங்கும்‌. லிங்க பைரவி தேவியின்‌ மஹா யாத்திரை, உள்நிலையில்‌ பரவசத்தில்‌ ஆழ்த்தும்‌ சக்திவாய்ந்த தியானங்கள்‌, சத்குருவின்‌ சத்சங்கம்‌, கண்ணைக் கவரும்‌ ஆதியோகி திவ்ய தரிசன காட்சி, பாரத பாரம்பரியத்தை பறைசாற்றும்‌ புகழ்பெற்ற கலைஞர்களின்‌ இசை மற்றும்‌ நடன நிகழ்ச்சிகளுடன்‌ விழா விடிய விடிய களைக்கட்ட உள்ளது.

விழாவில்‌ பங்கேற்கும்‌ அனைத்து பக்தர்களுக்கும்‌ அன்றைய தினம்‌ இரவு மஹா அன்னதானம்‌ வழங்கப்படும்‌ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...