தாராபுரத்தில் உள்ள எல்.ஐ.சி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், மத்திய பாஜக அரசு அதானி குடும்பத்திற்கு துணை போனதாக குற்றம்சாட்டி கோஷங்களை எழுப்பினர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள எல்.ஐ.சி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் தென்னரசு தலைமையில் தாராபுரம் அமராவதி ரவுண்டானா அருகே உள்ள எல்ஐசி அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ நிறுவனங்களில் கடன் வாங்கி மோசடி செய்த அதானி குழுமத்திற்கு மத்திய பாஜக அரசு துணை போவதாக குற்றம் சாட்டப்பட்டது.
ஹின்டென்பர்க் ஆராய்ச்சி அறிக்கை குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது கூட்டு நாடாளுமன்ற குழுவின் கீழ் பாரபட்சமற்ற விசாரணை நடத்த மத்திய அரசை வலியுறுத்தினர்.
மேலும், எல்.ஐ. சி. மற்றும் எஸ். பி.ஐ. உள்ளிட்ட பிற தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை அதானி குழுமத்தில் மத்திய அரசு முதலீடு செய்ய நிர்பந்தித்தது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்.
எல்.ஐ.சி மற்றும் எஸ்.பி.ஐ. வங்கியில் முதலீடு செய்த ஏழை பாதிக்க கூடாது, முதலீட்டாளர்களை பாதுகாக்க மத்திய அரசு சரியான தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.