கோவை ஆத்துப்பாலம் வழியாகக் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிப்பு

கோவை ஆத்துப்பாலம் வழியாக உக்கடம், கனரக வாகனங்கள் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்படுவதாக மாநகர போலீசார் அறிவிப்பு.


கோவை: உக்கடம், ஆத்துப்பாலத்தில், மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை, உக்கடம், ஆத்துப்பாலத்தில், மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, கோவை மாநகர காவல் போக்குவரத்து பிரிவின் சோதனை முயற்சியாக, கோட்டப் பொறியாளர் சாலை பாதுகாப்பு, மனுநீதி மற்றும் அந்த பிரிவைச் சார்ந்த அலுவலர்களுடன் இணைந்து, இன்று மாலை 4 மணிமுதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி, பாலக்காடு ரோட்டிலிருந்து, ஆத்துப்பாலம் வழியாக, கோவை மாநகருக்குள், உக்கடம் நோக்கி வரும், கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள், முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி, ரோட்டிலிருந்து கோவை மாநகருக்குள், வரும் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர இலகுரக வாகனங்கள், ஆத்துப்பாலத்திலிருந்து உக்கடம் நோக்கி, வலதுபுறம் திரும்பத் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாகன ஓட்டிகள், நேராக சுமார் 500 மீட்டர் தொலைவில் திரும்பி இடதுபுறமாகத் திரும்பி, உக்கடம் நோக்கி, தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்.

பாலக்காடு சாலை வழியாக, கோவை மாநகருக்குள், வரும் கனரக வாகனங்கள், மற்றும் சரக்கு வாகனங்கள், கோவைப்புதூர் பிரிவில், இடதுபுறமாகத் திரும்பியும் அல்லது சுண்ணாம்பு காளவாய் சந்திப்பு, புட்டுவிக்கி சாலையில் இடதுபுறமாகத் திரும்பி, சுண்டக்காமுத்தூர் சாலை வழியாக, தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்.

பொள்ளாச்சி சாலையிலிருந்து, கோவை மாநகருக்குள், வரும் கனரக வாகனங்கள், சுந்தராபுரம் சந்திப்பில், வலதுபுறமாகத் திரும்பி, போத்தனூர், நஞ்சுண்டாபுரம், ராமநாதபுரம் ரோடு வழியாக, கோவை மாநகருக்குள் செல்லலாம்.

அதேபோல், கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கு, செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகன ஓட்டிகள், ஆத்துப்பாலம் வழியாக, வழக்கம்போல், எந்தவித தடையுமின்றி, தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்.

இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு, பொதுமக்கள் தங்களது ஒத்துழைப்பை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...