108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் பணி- கோவையில் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு!

கோவையில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம், கோவை ரயில் நிலையம் அருகில் தாமஸ் ஹாலில் நாளை நடைபெறுகிறது.



கோவை: 108 ஆம்புலன்ஸ் சேவையில் மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது.

108 சேவை ஒரு கட்டணமில்லாத மருத்துவம், காவல் மற்றும் தீ முதலிய அவசர சேவைகளுக்கான ஒருங்கிணைந்த அழைப்பு எண்ணாகும். இந்த சேவை பொது மக்களுக்கு 24 மணி நேரமும் கிடைக்கக்கூடிய முற்றிலும் இலவசமான சேவையாகும். தமிழக அரசு, தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் கீழ், EMRI GREEN HEALTH SERVICES நிறுவனத்துடன், அவசரகால சேவைகளுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இணைந்து, தமிழக மக்களுக்காக செயலாற்றுகிறது.

இந்த மையமானது, சென்னையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவை, தொழிலாளர் ஆணையர் அலுவலகம் பின்புறம், DMS வளாகம், தேனாம்பேட்டை, சென்னை என்ற முகவரியை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வருகிறது.

MRI GREEN HEALTH SERVICES நிறுவனம் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாமினை நாளை கோவையில் நடத்தவுள்ளது.

அதற்கான விவரங்கள் கீழ்வருமாறு;

பணி நேரம்: 12 மணி நேர ஷிப்ட் முறை (இரவு மற்றும் பகல் ஷிப்ட் என மாறும்)



ஓட்டுனருக்கான அடிப்படை தகுதிகள்:

கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி

வயது: நேர்முக தேர்வு அன்று 24 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

பாலினம்: ஆண் மற்றும் பெண்.

உயரம்: 162.5 செண்டிமீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும்

ஓட்டுனர் தகுதி: இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் Badge வாகன உரிமம்.

அனுபவம்: இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் Badge வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 1 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், தங்களுடைய கல்வி, ஓட்டுனர் உரிமம் மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சரிபார்ப்பதற்காக கொண்டு வரவேண்டும்.

வெளியூர்களில் இருந்து வரும் விண்ணப்பதாரர்கள் போக்குவரத்துக்கான ஏற்பாடுகளை அவரவர்களே செய்துக் கொள்ள வேண்டும். இதற்காக தனியாக படி எதுவும் வழங்கப்படமாட்டாது.

தேர்வு முறை:

1. எழுத்துத் தேர்வு

2. தொழில்நுட்பத் தேர்வு

3. மனிதவள துறை நேர்காணல்

4. கண்பார்வை & மருத்துவம் சம்பந்தப்பட்ட தேர்வு

5. சாலை விதிகளுக்கான தேர்வு.

மாத ஊதியம்: ரூ.15235/- (மொத்த ஊதியம்). தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 10 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி வழங்கப்படும் ( பயிற்சிக்காலத்தில் தங்கும் வசதி செய்துதரப்படும்)



மருத்துவ உதவியாளருக்கான அடிப்படை தகுதிகள்:

கல்வித்தகுதி:

Category Qualification Age work Salary / Stipend

EMT B Sc. நர்சிங், அல்லது GNM, ANM, DMLT (12 ஆம் வகுப்பிற்கு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்). அல்லது Life Science Graduates (B.Sc. Zoology, Botany, Bio chemistry, Micro Biology, Biotechnology,) 19 – 30 years Willing to work in shifts (Day shift or night shift) Rs.15,435 /- plus allowances as applicable.

பாலினம்: ஆண் மற்றும் பெண்

தேர்வு முறை:

1. எழுத்துத் தேர்வு

2 .மருத்துவ நேர்முகம்- உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பானவை

3. மனிதவளத் துறையின் நேர்முகம்.

தேர்வு செய்யப்பட்டவர்கள் 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி, மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சிகளும் அளிக்கப்படும். (பயிற்சிக்காலத்தில் தங்கும் வசதி செய்துதரப்படும்).

மேலும் விவரம் அறிய விரும்புவோர் 7397444147, 7397724827, 9154189423 என்ற தொலைபேசி எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வனர தொடர்பு கொள்ளலாம். இந்த வேலைவாய்ப்பு முகாம் நாளை கோவை ரயில் நிலையம் அருகில் போலீஸ் கேன்டீன் பின்புறம் உள்ள தாமஸ் ஹாலில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...