'இந்து மக்களை திசைத்திருப்பவே அறநிலையத்துறை மீது குற்றச்சாட்டு..!' - கோவையில் அமைச்சர் சேகர் பாபு விளக்கம்!

நாட்டில் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் இந்து மக்கள் தங்களின் பக்கம் திரும்புவார்கள் என்ற எதிர்பார்ப்பில் இந்து சமய அறநிலையத்துறை மீது குற்றச்சாட்டு வைக்கப்படுவதாக அமைச்சர் சேகர்பாபு பேச்சு.



கோவை: கோவில்களில் எந்த காலத்திலும் உருவாக்க முடியாத பொக்கிஷங்கள் உள்ளன. அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்றால் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தால் தான் முடியும். நாட்டில் ஏதாவது ஒரு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் அரசியலில் ஏதாவது ஒரு தடுமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் ஏதாவது இந்துக்கள் அவர்கள் பக்கம் திரும்புவார்களா என்று எதிர்பார்க்கின்றனர் என்று கோவையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவிலில் குடமுழுக்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு சென்னை செல்ல கோவை விமான நிலையம் வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,



பழனி கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு 33 அக்னிக் குண்டம் அமைக்கப்பட்டன, 13 மேல் மண்டபம் அனைத்து பிரகாரங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளது. இந்த ஆட்சி ஏற்பட்ட பின்னர் 447 கோவில்களுக்குக் குடமுழுக்கு நடைபெற்று உள்ளது. தமிழில் 108 ஓதுவார்கள் வைத்து வேத மந்திரம், திருமுறை, கந்த சஷ்டி கவசம் ஆகியவை இடம் பெற்று இருந்தது.

தமிழில் குடமுழுக்கு நடத்த நீதிமன்றம் ஒரு குழு அமைக்க அறிவுறுத்தியது, அதன்படி குழு அமைக்கப்பட்டு அவர்கள் அது சம்பந்தமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக ஆட்சியில் 282 சிலைகள் மீட்கப்பட்டு உள்ளன. 62 சிலைகள் வெளிநாடுகளிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

10 சிலைகள் சென்னையில் தொழிலதிபர் வீட்டிலிருந்து மீட்கப்பட்டு உள்ளது. உரிய ஆவணங்களை ஒப்படைக்கும் பட்சத்தில் மீண்டும் அந்தந்த கோவில்களுக்குச் சிலைகள் ஒப்படைக்கப்படும். கோவிலுக்குச் சொந்தமான 3.54 லட்சம் ஏக்கர் நிலங்களை அளவிடும் பணி தொடங்கினோம் என்றார்.

கோவில்களில் உள்ள யானைகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, தமிழ் நாட்டுக் கோயில்களில் 29 யானைகள் உள்ளன. அதில் 26 கோவில்களில் குளியல் தொட்டி, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யானைகளுக்காக நடைபாதை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனவே யானைகள் புத்துணர்வு முகாம் தேவையற்ற ஒன்றாகிவிட்டது, என்றார்.



பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் இந்து சமய அறநிலையத்துறை மீதான குற்றச்சாட்டுத் தொடர்பாகக் கேள்வி எழுப்பிய போது, கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டிலிருந்தால் தான் கட்டுப்பாட்டுடன் இருக்கும். கோவில்களில் எந்த காலத்திலும் உருவாக்க முடியாத பொக்கிஷங்கள் உள்ளன.

அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்றால் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தால் தான் முடியும். நாட்டில் ஏதாவது ஒரு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் அதன் மூலம் அரசியலில் ஏதாவது ஒரு தடுமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

அதன் மூலம் ஏதாவது இந்துக்கள் அவர்கள் பக்கம் திரும்புவார்களா என்று எதிர்பார்க்கின்றனர். இந்த ஆட்சியை பொறுத்தவரையில் தடுமாறாத ஒரு இரும்பு மனிதர் வழிநடத்திக் கொண்டிருக்கிறார் எனக் கூறினார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...