உடுமலை பகுதியில் மூடுபனிப்பொழிவு - வாகன ஓட்டிகள் அவதி!

திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை நிலவிய அதிகப்படியான மூடுபனிப் பொழிவால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.



திருப்பூர்: இயற்கையின் படைப்பில் முன்பனிகாலம், பின்பனிகாலம் இளவேனிற்காலம், கோடைகாலம், கார் காலம், இலையுதிர் காலம் உள்ளிட்ட பல்வேறு பருவங்கள் சுழற்சிமுறையில் வந்து செல்கின்றன.

ஒவ்வொரு பருவமும் ஒவ்வொரு குணத்தை கொண்டிருந்தாலும் உடலில் ஏற்படுகின்ற வாயு, பித்தம், கபம் உள்ளிட்டவற்றை சீரமைப்பதில் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. இதனால், நோய் நொடியில்லாமல் உயிர் வாழ்வதற்கு உண்டான சத்துக்கள் இயற்கையாவே உடலுக்கு கிடைத்து விடுகிறது.

சூரியன் வெப்பத்தை அளிப்பதும், சந்திரன் குழுமையை தருவதும் இயற்கையின் நியதியாகும். இயற்கை நமக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அன்றாடம் தொய்வில்லாமல் தன்னலமின்றி செய்து வருகிறது. பருவத்தே பெய்யும் மழையும், மாசில்லா காற்றும், பாரம்பரியமிக்க உணவுகளும் உடலுக்கு காலங்காலமாக ஆரோக்கியத்தை அளித்து வருகிறது.

கடும் வெயிலுக்கும், பசிக்கும் தாகத்திற்கும் தாக்குப்பிடிக்கும் நாம் சிறுமழை மற்றும் பனித்துளிக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வீடுகளில் முடங்கி விடுகிறோம்.

பருவத்திற்கு ஏற்ற உணவுகளை எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கு நாம் கற்றுக்கொண்டால் நோய்நொடி இல்லாத வாழ்வை பெறலாம் என்பதே பருவங்கள் நமக்கு உணர்த்தும் மொழியாகும்.



தை மாதமான தற்போது பின்பனிக்காலம் தொடங்கி உள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளான உரல்பட்டி, தளி, ஜல்லிப்பட்டி உட்பட பகுதியில் இன்று காலை வழக்கத்திற்கு அதிகமாக பனிப்பொழிவு நிலவியது.



இதனால் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு மூடுபனி நிலவியதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்கிச் சென்றனர். மூடுபனியுடன் கடும் குளிரும் நிலவியதால் பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.

இதற்கிடையில், மழைபோல் கொட்டிய மூடுபனியை உடுமலை இளைஞர்கள் வீடியோ, புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதுடன் உறவினர்கள் நண்பர்களுக்கு பகிர்ந்தும் மகிழ்ந்தனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...