மேட்டுப்பாளையத்தில் நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரையில் வழக்கறிஞரை போலீசார் தாக்கியதைக் கண்டித்து மேட்டுப்பாளையத்தில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்.


கோவை: மேட்டுப்பாளையத்தில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் நீதிமன்றத்தைப் புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் கீரைத்துரை காவல்நிலைய போலீசார் ராஜேஷ், ஸ்டாலின் என்ற இரண்டு வழக்கறிஞர்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்து இருவரையும் போலீசார் கடுமையாகத் தாக்கியதாகவும், இதில் அவர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.



இதனைக் கண்டித்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இன்று நீதிமன்ற பணிகளைப் புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் கூட்டமைப்பின் சார்பில் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு உடனடியாக வழக்கறிஞர்களை தாக்கிய காவல்துறையினரை கைது செய்ய வேண்டும், அவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும், மனித உரிமை மீறல்களில் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்களுக்கு தொழில் பாதுகாப்பு மசோதாவை உடனடியாக சட்டமாக நிறைவேற்ற வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...