பொதுமக்கள் கொண்டுவரும் பாட்டிலில் உள்ள தண்ணீரை குடிக்க வைத்து போலீசார் சோதனை! - கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு

குடியரசு தினம் நெருங்குவதால், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீவிர சோதனைக்கு பிறகே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். தண்ணீர் பாட்டிலில் உள்ள தண்ணீரை குடிக்க வைத்து போலீசார் சோதனை செய்தனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் நாளில் பொதுமக்கள் பலரும் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனுக்களை அளிப்பர். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.



அதே சமயம் அசம்பாவிதங்கள் ஏதேனும் நடைபெறாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார், பொதுமக்களையும் அவர்களது உடைமைகளையும் சோதனை மேற்கொண்ட பிறகே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிப்பர்.



கடந்த வாரம் பொங்கல் பண்டிகை விடுமுறை என்பதால், இன்று அதிக அளவிலான பொதுமக்கள் மனு அளிக்க வந்த வண்ணம் உள்ளனர். இன்னும் இரண்டு நாட்களில் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளதை ஒட்டியும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மனு அளிக்க வரும் பொதுமக்களின் உடமைகளை வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் கொண்டு சோதனை செய்யப்படுகிறது.

பல்வேறு சமயங்களில் மனு அளிக்க வரும் பொதுமக்களில் சிலர் தண்ணீர் பாட்டில்களில் மண்ணெண்ணெய் அல்லது பெட்ரோல் போன்றவற்றை எடுத்து வந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சிகள் மேற்கொள்கின்றனர். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் மனு அளிக்க வந்த நபர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்றைய தினம் பொதுமக்களிடம் சோதனை மேற்கொள்ளும் போலீசார், பொதுமக்கள் எடுத்து வரும் தண்ணீர் பாட்டிலை சோதனை செய்து அதனை பொதுமக்களே குடித்து காண்பிக்க செய்து பின்னர் உள்ளே செல்ல அனுமதி அளித்தனர்.

Newsletter

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...

கோவையில் 4 பேர் கும்பல் தாக்கிய தொழிலாளி உயிரிழப்பு; கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் 3 நாட்களாக தீவிர சிக...

12 மணி நேர பணிச்சுமை: திருமலையம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்

கோவை திருமலையம்பாளையம் பேரூராட்சியில் தூய்மைப்பணியாளர்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என 12 மணி நேரம் பணியாற்ற வேண்ட...

கோவையில் டயர் வெடித்து நடுரோட்டில் கவிழ்ந்த லாரி - சாலையில் சிதறிய தேங்காய்கள்

கோவை உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை நோக்கி தேங்காய் லோடு ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி, டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப...

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...