பல்லடத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்த கார் : உயிர் தப்பிய ஓட்டுநர் - வைரல் வீடியோ!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நேற்றிரவு சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தலைகுப்புறக் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்த சம்பவத்தின் வீடியோக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூர் சுங்கச்சாவடி அருகே நள்ளிரவில் கார் ஒன்று வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. அப்போது, அந்தக் கார் திடீரென சுங்கச்சாவடியின் தடுப்பு சுவற்றில் மோதி தலைக்குப்புற கீழே விழுந்து தீ பிடித்து எரிந்தது. இதில் அதிர்ச்சியடைந்த கார் ஓட்டுநர் பயத்தில் உள்ளே சிக்கித் தவித்தார்.



இதனைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத் துறையினர் காரில் இருந்த ரிஷிகேஷ் குமாரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



காரில் மளமளவென பற்றியெரிந்துகொண்டிருந்த தீயை, தீயணைப்புத்துறை சிறிது நேரம் போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலையில் ஓடிய கார் திடீரென தலைகுப்புறக் கவிழ்ந்து தீப்பற்றியெரிந்த இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...