தமிழகம்.. தமிழ்நாடு சர்ச்சை குறித்து அறிக்கை வெளியிட்டு ஆளுநர் விளக்கம்

ஒரு மாத காசி தமிழ்ச் சங்கமம் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு என்பதற்குப் பதில் தமிழகம் என்று பேசியது ஏன் என்பதற்கு விளக்கம்.


சென்னை: சமீபத்தில் விழா ஒன்றில் தமிழ்நாடு குறித்துப் பேசிய போது ஏற்பட்ட சர்ச்சை தொடர்பாக ஆளுநர் ரவி விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜனவரி 4ஆம் தேதியன்று ஆளுநர் மாளிகையில், காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாச்சார தொடர்பைக் கொண்டாடும் ஒரு மாத காசி தமிழ்ச் சங்கமம் விழா நடைபெற்றது.

இதில், பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது வரலாற்றுப் பண்பாடு பற்றி ஆளுநர் பேசும்போது, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பைக் குறிக்கத் தமிழகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். அந்த காலத்தில் தமிழ்நாடு என்பது இருக்கவில்லை.

எனவே வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில் தமிழகம் என்பதை மிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன். எனது கண்ணோட்டத்தைத் தமிழ்நாட்டில் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போலப் பொருள் கொள்வதோ? அனுமானம் செய்து கொள்வதோ தவறானது, மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பாடு என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது பேச்சு அடிப்படை புரியாமல் ஆளுநர் தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை என்னும் வாதங்களை விவாத பொருளாக்கி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநர் விளக்கம் அளித்துள்ள நிலையில் தமிழ்நாடு குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Newsletter

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...

100 சதவீத வாக்குப்பதிவுக்காக கோவையில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி

கோவையில் சட்டமன்றத் தேர்தலுக்கான 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி மேற்கொண...

கோவையில் ஓய்வு பெற்ற தாசில்தாரிடம் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்ற பெயரில் ரூ.45.50 லட்சம் டிஜிட்டல் மோசடி

கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் குணசேகரன் (70) லக்னோ தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்று கூற...

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி: தவெக வேட்பாளர் கனிமொழி தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் கனிமொழி நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் கடைகள், பெட்ரோல் பங்குகளுக்...