எம்.ஜி.ஆரின் 106வது பிறந்தநாள் - ஊர்வலமாக வந்து கோவை அதிமுகவினர் மலர் மரியாதை

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்தநாளையொட்டி, கோவையில் அதிமுகவினர் ஊர்வலமாகச் சென்று உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



கோவை: மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டுவருகிறது. இதனையொட்டி, எம்.ஜி.ஆரின் சிலைக்கு அதிமுகவினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் உள்ள அதிமுகவினர் அவிநாசிசாலை அண்ணா சிலை பகுதியில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



அதிமுக கோவை மாநகர் மாவட்ட செயலாளரும், வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் அர்ச்சுணன் முன்னிலையில், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம், கோவை மாநகராட்சி முன்னாள் மேயர் செ.ம.வேலுசாமி உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் இதய தெய்வம் மாளிகையில் இருந்து ஊர்வலமாக வந்து எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



அதனைத் தொடர்ந்து, இதய தெய்வம் மாளிகையில் உள்ள எம்.ஜி.ஆரின் புகைப்படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...