கோவை அருகே வெள்ளபதி மலைவாழ் கிராமத்தில் பொங்கல் கொண்டாட்டம்

கோவை மாவட்டம், சிறுவாணி அடிவாரத்தில் உள்ள வெள்ளபதி மலைவாழ் கிராமத்தில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாட்டம்.


கோவை: கோவை மாவட்டம், சிறுவாணி அடிவாரத்தில் உள்ள வெள்ளபதி மலைவாழ் கிராமங்களில் மாட்டுப் பொங்கல் முன்னிட்டு பொதுமக்கள் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து இயற்கைக்கு வணக்கம் செலுத்தினர்.



கோவை மாவட்டம் சிறுவாணி அடிவாரத்தில் உள்ள வெள்ளபதி மலைவாழ் கிராமத்தில் நேர்டு தொண்டு அமைப்புடன் இணைந்து அப்பகுதி மக்கள் பொங்கல் வைத்துக் கொண்டாடினர்.



வெள்ளப்பதி கிராமத்தில் உள்ள பொதுஇடத்தில் வண்ண கோலமிட்டு புகையில்லா அடுப்புடன் பொங்கல் பொங்கிக் கொண்டாடினர். கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு கட்டுப்பாடுகளின்றி ஊர் பொதுமக்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் இணைந்து மாட்டுப் பொங்கல் விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

மக்கள் வளமும் நலமும் பெற்று வாழ வேண்டும் என இயற்கை அன்னையிடம் வேண்டிக் கொண்டனர். அப்பகுதி மக்களுக்குப் பேராசிரியர் கனகராஜ், மருதாச்சல அடிகளார் பொங்கல் பரிசுகளை வழங்கினர்.



இதேபோல் சீங்கப்பதி கிராமத்திலும் பொங்கல் களைகட்டியது. பாரம்பரிய ஆடல், பாடலுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அரங்கேறின. ஊர் நடுவே அமைக்கப்பட்ட கரும்பு பந்தலில் பொங்கல் பொங்கி, அறுவடை நன்றாக அமைந்த இயற்கை அன்னைக்கு நன்றி தெரிவித்து, மகிழ்ச்சி பொங்கப் பொங்கல் பண்டிகையினை கொண்டாடி மகிழ்ந்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...