செங்கற்கள் திருட்டுத்தனமாக விற்பனை - கோவை வருவாய் அலுவலரிடம் புகார்!

தடாகம் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட செங்கல் சூளையிலிருந்து செங்கற்கள் திருட்டுத்தனமாக விற்கப்பட்டதாகத் தடாகம் பள்ளத்தாக்கு பாதுகாப்பு குழுவினர் கோவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார்.


கோவை: அரசால் தடைசெய்யப்பட்ட செங்கல் சூளையிலிருந்து திருட்டுத்தனமாகச் செங்கற்கள் விற்கப்பட்டதாக கோவை வருவாய் அலுவலரிடம் தடாகம் பள்ளத்தாக்கு பாதுகாப்பு குழுவினர் மனு அளித்தனர்.



அந்த மனுவில், கோவை தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் 177 செங்கல் சூளைகள், உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஒரு ஆண்டுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன. இந்த செங்கல் சூளை உரிமையாளர்கள், கனிமவள திருட்டு மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக 433 கோடி ரூபாய் அபராதம் செலுத்த ஆட்சியர் தலைமையிலான குழுவினர் நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்து இருந்தனர்.

இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி புவியியல் மற்றும் சுங்கத்துறை ஆணையர் ஜெயகாந்தன், ஏற்கனவே விதிக்கப்பட்ட அபராத தொகையான 433 கோடி ரூபாயைத் தவிர்த்து, 13.10 கோடி கட்டினாலே, அபராதம் கட்டி வேக வைத்த மற்றும் பச்சை செங்கற்களை எடுத்து விற்பனை செய்து கொள்ளலாம் என ஆணை பிறப்பித்துள்ளார்.

செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட ஆணையருக்கு எதிராக, தடை உத்தரவு பிறப்பிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தடாகம் இயற்கை பாதுகாப்பு உறுப்பினர் வழக்குத் தொடுத்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் புவியியல் மற்றும் சுங்கத்துறை ஆணையரின் உத்தரவைத் தடை செய்தும்,வருகின்ற 19ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவும், செங்கல் எடுக்கக்கூடாது என உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

இப்படி செங்கல் எடுத்து விற்பனை செய்யப்பட்டிருந்தால் அதுதொடர்பான விசாரணை நடத்தி மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருந்தனர். தடாகம் பாதுகாப்புக்குழுவினர், 1500 லாரிகளில் பச்சை மற்றும் வேக வைத்த செங்கற்கள் எடுத்துச்செல்லப்பட்டு விற்கப்பட்டதாகக் மனுவில் கூறப்பட்டுள்ளது.



அதற்கான ஆதாரங்களை இணைத்து புகாராக மாவட்ட வருவாய் அலுவலரிடம் கொடுத்தனர். மாவட்ட நிர்வாகம் செங்கல் சூளைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நீதிமன்றத்தில் இதுகுறித்த ஆவணங்களை சமர்ப்பிக்க இருப்பதாகத் தெரிவித்தனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...