ரியல் எஸ்டேட் அதிபருக்குக் கொலை மிரட்டல் - கோவை ஐஜி அலுவலகத்தில் புகார்

கட்டப்பஞ்சாயத்து செய்து, கொலை மிரட்டல் விடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கொடுமுடியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர், கோவையில் உள்ள மேற்கு மண்டல போலீஸ் ஐஜி அலுவலகத்தில் புகார் அளித்தார்.



கோவை: ஈரோடு மாவட்டம் கொடுமுடி சாலைப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சாமியப்பன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் மேற்கு மண்டல போலீஸ் ஐஜி சுதாகரை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், நான் கடந்த பல ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். எனது வீட்டின் அருகில் வசித்து வரும் சேதுராமன் என்பவர் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் என்னைத் தொடர்ந்து தொழில் செய்யவிடாமல் பணம் கேட்டும், கட்டப்பஞ்சாயத்து செய்தும் மிரட்டி வருகிறார்.

சேதுராமன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல தொழிலதிபர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டி பணம் பறிப்பதைத் தொழிலாகச் செய்து வருகிறார். எங்களது ரியல் எஸ்டேட் வாடிக்கையாளர்களிடம் எங்கள் நிறுவனத்தை பற்றி தவறாகக் கூறி தொழிலை முடக்கி வருகிறார்.

மேலும் சேதுராமனின் உறவினர் ஈஸ்வரன் என்பவர் மாவட்ட ஆட்சியருக்கு உதவியாளராக பணிபுரிந்து வருகிறார் எனக் கூறி மிரட்டி வருகிறார்.

மேலும் ரூ.20 லட்சம் கொடுத்தால் மட்டுமே ரியல் எஸ்டேட் தொழில் செய்ய அனுமதிப்பேன் என்று தொந்தரவு செய்து வருகிறார். ஏற்கனவே இது குறித்து முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்குப் புகார் அளித்துள்ளேன்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அடையாளம் தெரியாத நபர்கள் என்னை மிரட்டுகின்றனர். எனவே சேதுராமன் மற்றும் அவரது கூட்டாளிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...

100 சதவீத வாக்குப்பதிவுக்காக கோவையில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி

கோவையில் சட்டமன்றத் தேர்தலுக்கான 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி மேற்கொண...

கோவையில் ஓய்வு பெற்ற தாசில்தாரிடம் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்ற பெயரில் ரூ.45.50 லட்சம் டிஜிட்டல் மோசடி

கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் குணசேகரன் (70) லக்னோ தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்று கூற...

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி: தவெக வேட்பாளர் கனிமொழி தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் கனிமொழி நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் கடைகள், பெட்ரோல் பங்குகளுக்...