பிடிபட்டது PM2 மக்னா யானை! - நிம்மதியில் நீலகிரி மக்கள்!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளாக குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்துவந்த PM2 மக்னா யானை, கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டுள்ளது.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவாலா, பாடந்தொரை, வாழவயல் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக PM2 மக்னா சுற்றித் திரிந்தது. இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து 50-க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்திய PM2 மக்னா யானை, அரிசி போன்ற உணவு பொருட்களையும் சாப்பிட்டு வந்தது.

மேலும், பொதுமக்கள் 2 பேரையும் அடித்துக்கொன்றதால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் PM2 மக்னா யானையை வனத்துறை உடனடியாகப் பிடிக்க வேண்டுமென வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதையடுத்து, கடந்த மாதம் யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

பிடிபட்ட யானையானது முதுமலை புலிகள் காப்பகம் வெளிமண்டல பகுதியில் உள்ள சீகூர் வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால், PM2 மக்னா மீண்டும் கூடலூர் பகுதியை நோக்கி வந்தது.

அதனை தடுத்து நிறுத்திய தமிழக வனத்துறையினர் கும்கி யானைகளின் உதவியுடன் கேரளா வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். அப்போது, முத்தங்கா வனப்பகுதிக்குள் நுழைந்த PM2 மக்னா யானை, வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரி நகரினுள் புகுந்து ஒருவரை தாக்கியது.



இதையடுத்து, கேரளாவிலும் அட்டூழியத்தைத் தொடங்கிய PM2 மக்னா யானையைப் பிடிக்க அம்மாநில வனத்துறை உத்தரவிட்டது. இதையடுத்து, இன்று காலை PM2 மக்னா யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கபட்டது.



மேலும், இந்த யானையை முத்தங்காவில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் வைத்து பரமாரிக்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது. PM2 மக்னா யானையைப் பிடிக்க நடவடிக்கை எடுத்த கேரள அரசு மற்றும் வனத்துறைக்கு அம்மாநில மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...