பைக்கில் சென்ற பெண்ணிடம் 2.5 பவுன் நகை பறிப்பு

கோவை நஞ்சுண்டாபுரம் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த பெண்ணிடம் மர்ம நபர்கள் 2.5 பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்றனர்.


கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் கே ஆர் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திரன். இவரது மனைவி சத்யகலா (46). இவர் ராமநாதபுரம் பகுதியில் உள்ள மருந்தகத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று அவர் வழக்கம்போல் பணிக்குச் சென்றுவிட்டு தனது மகளுடன் இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார்.

அப்போது நஞ்சுண்டாபுரம் கருப்பராயன் கோவில் அருகே வந்தபோது, எதிரே மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சத்யகலா அணிந்திருந்த 2.5 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சத்தியகலாவிற்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.

சம்பவம்குறித்து அவர் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...