பெண்களுக்கு எதிரான குற்றங்களை பேசும் ‘V3’ திரைப்படத்தை பார்த்து பாராட்டிய பெண்கள்

கோவையில் உள்ள தனியார் திரையங்கில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை பேசும் ‘V3’ திரைப்படத்தின் இலவச காட்சியை பார்த்த பெண்கள் படக்குழுவை பாராட்டினர்.


கோவை: 2023ஆம் ஆண்டில் திரைக்கு வந்துள்ள முதல் தமிழ் திரைப்படமான “V3”திரைப்படம் கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள 250 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. கோவையை சேர்ந்த தொழிலதிபர் விஷ்ணு பிரபு தயாரிப்பில், அமுதவாணன் இயக்கத்தில் வெளிவந்துள்ள V3 திரைப்படத்தில் மூன்று முக்கிய கதாபாத்திரத்தில், நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார்.

பெண்களுக்கு நடக்கும் பாலியல் பிரச்சனைகளுக்கு தீர்வு என்பது ஒரு நாளில் கிடைக்க கூடியது அல்ல. பாலின சமத்துவம், பெண்களுக்கு மதிப்பளிப்பது தொடர் விழிப்புணர்வு போன்றவை தான் தீர்வாக அமையும் என்பதை பல திரைப்படங்கள் முன்வைத்துள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், மேஜரான ஆணும் பெண்ணும் சுய ஒப்புதலோடு பாலியலில் ஈடுபடுவது ஒரு குற்றமாக பார்க்க கூடாது. மாறாக, பாலியல் தொழிலை அரசு அங்கீகரிக்க வேண்டும் என்று கருத்தை முன்வைக்கிறது இன்று வெளியாகியுள்ள V3 திரைப்படம்.

கோவை புரூக் ஃபீல்டுஸ் மாலில் உள்ள எஸ்.பி.ஐ திரையரங்கில் V3 திரைப்படத்தின் முதல் காட்சியை தயாரிப்பாளர் விஷ்ணு பிரபு மற்றும் இயக்குனர் அமுதா வாணன் மற்றும் திரைக்குழுவினர் வெளியிட்டனர். 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

படம் குறித்து இயக்குனர் அமுதவானன் நம்மிடம் பேசியதாவது, இன்று சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகள் தலைதூக்கி வருகிறது. அவற்றில் எச்சரிக்கை மணி அடிப்பதாக உள்ளது பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை ஆராய்ந்து பார்த்தால் அதில் பல்வேறு விடயங்கள் வெளிச்சத்துக்கு வரும். போதை, குடிப்பழக்கம், பெண்களை துட்சமாக கருதும் மனநிலை போன்ற பல்வேறு காரணங்களால் குற்றத்தில் ஈடுபடுகின்றனர் என்பது நாம் அறிந்ததே.

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியாக கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவது, இது போன்ற குற்றங்களில் ஈடுபட எண்ணுவோருக்கு ஒரு பாடமாக எச்சரிக்கை மணியாக அமைந்தாலும், பாலியல் குற்றங்களை குறைக்க நாம் இந்த பிரச்சனையை அதன் அடி ஆழத்தில் இருந்து பார்க்க வேண்டும். அது தான் V3 திரைப்படம் உருவாக முக்கிய நோக்கமாகும்.

பாலியல் தொழிலை அரசு அங்கீகரித்தால் பாலியல் குற்றங்கள் பெருமளவு குறையும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த கேள்வியை தான் V3 படத்தில் நான் முன் வைத்துள்ளேன்.

பெரும்பாலும், பாலியல் தொழில் நடக்கும் ரெட் லைட் ஏரியா என்று சொல்லக்கூடிய பகுதிகளை சுற்றியுள்ள 20 கிலோ மீட்டர் தொலைவிற்கு பாலியல் குற்றங்கள் குறைவு ஆய்வுகள் கூறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...

LPF and Affiliated Unions Protest in Coimbatore Against Centre and State Governments’ Labour Policies

The Coimbatore District Labour Progressive Federation (LPF) Council and affiliated unions staged a protest near the Red...

EPFO Wage Ceiling Revision: Coimbatore Officials Explain Benefits for Formal Sector Employees

The Union Cabinet’s decision to raise the EPFO mandatory coverage wage ceiling from ₹15,000 to ₹25,000, effective Septem...

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி ம...

கோவையில் கைவினைஞர் தனித்தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

2027 ஜூலை மாதம் DGT நடத்தும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள விரும்புவோர்...