டாஸ்மாக்கில் மாமூல் கேட்டு மிரட்டல் - கோவை ஆட்சியரிடம் டாஸ்மாக் சங்க கூட்டு குழுவினர் புகார்

டாஸ்மாக்கில் விற்பனையாகும் பாட்டிலுக்கு ரூ.2 மாமுல் தர வேண்டும் என தனி நபர்கள் மிரட்டுவதாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் டாஸ்மாக் சங்க கூட்டுக் குழு சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.



கோவை: டாஸ்மாக் அனைத்து சங்க கூட்டு குழுவினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.



அவர்களது மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கோவை மாவட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தினமும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிற்கு மதுபான விற்பனை நடைபெறுகிறது.

இதனிடையே டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சம்பந்தமில்லாத சில நபர்கள் (திலக், விக்கி, சஞ்சய்) பாட்டிலுக்கு இரண்டு ரூபாய் மாமூல் தர வேண்டும் என எங்களை மிரட்டுகின்றனர். எங்களுடைய அதிகாரிகளிடம் இது சம்பந்தமாக நாங்கள் ஏற்கனவே புகார் அளித்துள்ளோம்.

இந்த நிலையில் தற்போது அவர்களுடைய மிரட்டல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எங்களுடைய தனிப்பட்ட டாஸ்மாக்குக்கு செலுத்த வேண்டிய கணக்குகளையும் சில நபர்கள் அவர்களிடம் பரிமாறுகின்றனர். எதற்காக தனி நபரிடம் தங்களுடைய கணக்குகளை பரிமாற வேண்டும் என நாங்கள் கேள்வி எழுப்பியும் வருகிறோம்.

எனவே உடனடியாக மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு தனிநபரின் ஆதிக்கத்தை தடுக்க வேண்டும். மேலும் இதுபோன்று பணம் கேட்டு, மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல தமிழ்நாடு அரசின் பெயருக்கும் அந்த துறையின் அமைச்சரின் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட சிலர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், இதேபோல், கோவை மாநகர காவல் ஆணையாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...