கோவை ஈஷாவில் யோகா பயிற்சிக்கு சென்று மாயமான பெண் கிணற்றில் சடலமாக மீட்பு..!

கோவை ஈஷா மையத்திற்கு பயிற்சிக்காக சென்ற பெண் மாயமான வழக்கில், 14 நாட்களுக்கு பிறகு பெண்ணின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், போலீசார் கொலையா, தற்கொலையா என போலீசார் விசாரணை.



கோவை: திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்தவர்கள் பழனிகுமார் - சுபஸ்ரீ தம்பதி. இவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

இந்நிலையில், சுபஶ்ரீ கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சைலன்ஸ் என்ற யோகா பயிற்சிக்காக கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு சென்று பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து மற்றொரு பயிற்சிக்காக கடந்த டிசம்பர் 11ஆம் தேதி கோவை ஈஷா யோகா மையத்துக்கு சென்றுள்ளார். இந்நிலையில், அவரது கணவர் காலை 6 மணியளவில் ஈஷா மையத்திற்கு கொண்டு சென்று விட்டுள்ளார்.

இந்நிலையில், டிசம்பர் 18ஆம் தேதியுடன் இந்த பயிற்சி முடிவடைந்த நிலையில் அவரை அழைத்து செல்ல கணவர் பழனிகுமார் ஈஷா யோகா மையத்துக்கு வந்துள்ளார். இதற்காக காலை 6 மணிக்கே வந்து காத்திருத்த அவர், 11 மணி ஆகியும் சுபஶ்ரீ வராத நிலையில், செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.

ஆனால் அவருக்கு அழைப்பு செல்லாத நிலையில், ஈஷா யோகா மையத்தினர் காலையிலேயே பயிற்சி முடிந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது காலையிலேயே ஈஷா யோகா மையத்தின் மற்றொரு கேட் வழியே வெளியேறிய சுபஶ்ரீ, கால் டாக்ஸியில் லிப்ட் கேட்டு செம்மேடு பகுதிக்கு சென்றது தெரியவந்தது.

வேறொரு எண்ணில் இருந்து தனக்கு வந்த அழைப்பை பழனிக்குமார் தொடர்பு கொண்டபோது, “என் கணவரிடம் பேச வேண்டும் என பெண் ஒருவர் சொல்லிவிட்டு, அழைப்பை எடுக்கவில்லை எனக் கூறி சென்றுவிட்டார்” என அந்த எண்ணில் பேசிய நபர் கூறியுள்ளார்.

இதன் பின்னர் சுபஶ்ரீயை தொடர்பு கொள்ள முடியாத நிலையில், பழனிக்குமார், மனைவி சுபஶ்ரீ மாயமானது குறித்து ஆலாந்துறை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

பயிற்சியின்போது கையில் செல்போன் மற்றும் உடமைகளுடன் சென்றிருந்த சுபஶ்ரீ, பயிற்சிக்கு பின் வெளியே வரும்போது கையில் எதுவும் இல்லாமல் வெள்ளை நிறை உடை அணிந்து சாலையில் ஓடுவது போல் இருக்கும் சுபஶ்ரீயை கண்டுபிடிக்க 6 காவல் ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

மேலும், அவரது புகைப்படம் அனைத்து பேருந்து நிலையம், ரயில் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை செம்மேடு காந்திநகர் அருகே உள்ள கிணற்றில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.



இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், தீயணைப்பு படையினர் உதவியுடன் உடலை மீட்டனர். இறந்தது சுபஸ்ரீ தான் என அவரது கணவர் மோதிரம் மற்றும் ஈஷாவின் அடையாளம் அவரது கையில் அணிந்திருந்ததை வைத்து உறுதிப்படுத்தினர்.

சுபஸ்ரீயின் உடல் மீட்டு, காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுபஸ்ரீ தற்கொலையா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக சென்ற பெண் மாயமான வழக்கில், திடீர் திருப்பமாக பெண்ணின் உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...