கோவையில் போக்சோ குற்றவாளி மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம் - ஆட்சியர் உத்தரவின் பேரில் நடவடிக்கை

கோவை மேட்டுப்பாளையம் அருகே 12 வயது சிறுமியை வன்கொடுமை செய்து போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் மீது ஆட்சியர் சமீரன் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த கெம்மாரம்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் குமார் (42). இவர் 12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக காரமடை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இந்த நிலையில் வழக்கின் விசாரணை நடந்த நிலையில், கைதான நபர் பாலியல் குற்றவாளி என போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மாவட்ட ஆட்சியர் சமீரனுக்கு பரிந்துரை செய்தார்.

அதன் அடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், போக்சோ வழக்கில் கைதான ரமேஷ் குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின் படி போக்சோ வழக்கு குற்றவாளியான ரமேஷ் குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

குண்டர் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டால் கைதான நபர் ஒரு வருடத்துக்கு ஜாமீனில் வெளிவர முடியாது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

இதுவரை கோவை மாவட்டத்தில் போக்சோ வழக்கு குற்றவாளி 5 நபர்கள் உட்பட 38 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்திலும், 2 நபர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...