கோவை மத்திய மண்டலத்தில் நடைபெறும் தூய்மை பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரில் ஆய்வு

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியின் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 67 மற்றும் 68 வது வார்டுகளில் நடைபெற்று வரும் சாலை பணிகள் மற்றும் தூய்மை பணிகளை மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.


கோவை: கோவை‌ மாநகராட்சியின் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 68வது வார்டு டாடாபாத்‌ பகுதியில்‌ மாநகராட்சி அறிவியல்‌ பூங்காவை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



அப்போது, பூங்காவினை பராமரிக்க உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்திய பின்னர்‌,



67வது வார்டுக்கு உட்பட்ட காந்திபுரம்‌, கிராஸ்கட்‌ சாலையில்‌ உள்ள காய்கறி மார்க்கெட்டில்‌ ஆய்வு செய்தார்.



இதனையடுத்து, அப்பகுதியில்‌ உள்ள பொது கழிப்பிடம்‌ தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் பிரதாப், கழிப்பிடத்தை சுகாதாரமான முறையில்‌ பராமரித்திட சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்‌.



அதனைத்தொடர்ந்து, 67வது வார்டுக்குட்பட்ட காந்திபுரம்‌, கிராஸ்கட்‌ சாலையில்‌ உள்ள மாநகராட்சி வாகன நிறுத்துமிடத்தில்‌ ஆய்வு செய்தார்.



பின்னர் 82வது வார்டுக்கு உட்பட்ட நவாப்‌ ஹக்கீம்‌ சாலையில் ஆய்வு மேற்கொண்ட அவர், பழுதடைந்த சாலையை செப்பனிட சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்‌.

இந்த ஆய்வுகளின்போது, துணை மேயா்‌ வெற்றிச் செல்வன்‌‌, மத்திய மண்டல தலைவர்‌ மீனாலோகு, வரி விதிப்பு மற்றும்‌ நிதிக் குழுத்‌ தலைவர்‌ வி.பி.முபசீரா, மாநகரப் பொறியாளர் இளங்கோவன்‌, மாமன்ற உறுப்பினர்‌கள் வித்யா, கமலாவதி போஸ்‌, உதவி செயற் பொறியாளர்கள்‌ புவனேஸ்வரி, செந்தில்பாஸ்கர், உதவி பொறியாளர்கள்‌ கணேசன்‌, நாகராஜ்‌, பார்மான்‌ அலி, சுகாதார ஆய்வாளர்கள்‌ சந்திரன்‌, சரவணக்குமார்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...