அறிவு சார்ந்த நிகழ்ச்சிகளுடன் குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் 'யுகம் 2017' துவக்கம்


குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் 'யுகம் 2017' என்னும் நிகழ்ச்சி நேற்று தொடங்கி இன்று மற்றும் நாளை (பிப்ரவரி 10, 11) ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது



யுகம் 2017-இல் கலை மற்றும் அறிவு சார்ந்த நிகழ்ச்சிகள், பயிலரங்கம் மற்றும் பலவற்றுடன் நடைபெறும் இந்நிகழ்ச்சியானது மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்த ஒரு மேடையாக அமையும். இந்நிகழ்ச்சியில் இந்த வருடம் 12,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.



அறிவு சார்ந்த மற்றும் பயிலரங்கம் பிப்ரவரி 6 ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டது. இதில் 5000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று பயன்பெற்றார்கள். இந்த வருடத்துக்கான கருப்பொருள் "பெண்களின் முன்னேற்றம்" என்ற தலைப்பில் சமூக விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பயன்பெற்றனர். 



மேலும், இந்நிகழ்ச்சியில் டாக்டர் என்.மகாலிங்கம் தென் இந்திய கூடைப்பந்து விளையாட்டுப் போட்டி இவ்வாண்டு சேர்க்கப்பட்டுள்ளது.



இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பெண்களின் முன்னேற்றத்தைப் குறித்து மீரா எர்டா, ஷெபாலி தாதாபாய் மற்றும் நீபா நம்பூதிரி ஆகியோர் தங்களின் தூண்டுதல் மற்றும் தடைகளைப் பற்றி மாணவியர்களிடம் பகிர்ந்தனர்.



ஹீரோஸ் அன்லிமிடெட் என்ற தலைப்பில் அண்ணாதுரை, மூர்த்தி மேகவன், சேகர், பாலாஜி மற்றும் ஹரிஹரன் போன்ற சாதனையாளர்கள் தங்களின் அனுபவங்கள் குறித்து பகிர்ந்தனர்.



நீர் ஏவுகணைக்கான போட்டி, ரோபோகளுக்கான கால்பந்து போட்டி, ரேடியோவால் இயக்கப்படும் ஐசி என்ஜின் பந்தய போட்டி, காகிதத்தால் ஆடை அலங்காரம் செய்யும் போட்டி, மற்றும் பல போட்டிகள் இந்நிகழ்ச்சியில் நடைபெற்றது

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...