கோவையில் வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி மோசடி - தனியார் நிறுவன இயக்குனருக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.3 கோடி அபராதம்….!

வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி 65 பேரிடம் மோசடியில் ஈடுபட்ட தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குநர் ஜெகதீஸ்வரன் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.3 கோடி அபராதம் விதித்து டேன்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.


கோவை: கோவை பேரூர் பகுதியை சேர்ந்தவர் ரவிசந்திரன் எலக்ட்ரிசியன். இவரது மனைவி கீதாராணி. கடந்த 2017 -ல், பேரூர் காளாம்பாளையம் பகுதியில் செயல்பட்ட தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை, மனை வாங்க கீதாரணி அனுகியுள்ளார். அப்போது, அந்த நிறுவனத்தினர், வாடகை விலையில் சொந்த வீடு வாங்கலாம் என்ற திட்டத்தின் கீழ் இணையுமாறு ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

இதனை நம்பிய கீதாராணி, இரண்டு தவணைகளாக ரூ.6.30 லட்சம் பணத்தை நிறுவன நிர்வாக இயக்குநர் ஜெகதீஸ்வரனிடம் கொடுத்துள்ளார். இதற்காக, தீத்திபாளையம் பகுதியில் இடத்தையும் வழங்கியுள்ளனர். அங்கு கீதாராணி குடும்பத்தினர் பூமி பூஜை போட்டு பணிகளை துவங்க இருந்த நிலையில், அதே இடத்தில் இரண்டு நாட்கள் கழித்து வேறு ஒருவர் பூமி பூஜை போட்டுள்ளார்.

அதிர்ச்சியடைந்த கீதாராணி, அவர் ஏமாற்றப்பட்டது தெரிய வந்ததை அடுத்து, அந்நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர்கள், பணத்தை திருப்பிக் கொடுப்பதாக கூறி, இரண்டு காசோலைகளில் ரூ.6.30 லட்சம் பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர்.

அதை வங்கியில் செலுத்திய போது, போதிய பணம் இல்லாததால் காசோலை பவுன்ஸ் ஆகியுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட கீதாராணி, பேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பின்னர், வழக்கு கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்நிறுவன இயக்குநர் ஜெகதீஸ்வரன், விஜயகுமார், முகமது ரபீக், உமாதேவி ஆகியோர் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து விசாரணையில் இதேபோல 65 பேரிடம் சுமார் ரூ.3.03 கோடி வரை ஏமாற்றியது தெரியவந்தது. இந்த வழக்கு விசாரணை கோவை டேன்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இன்று வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், முக்கிய குற்றவாளியான ஜெகதீஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.3 கோடி அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் இருந்து, விஜயகுமார், முகமது ரபீக், உமாதேவி ஆகிய மூவரும் விடுவிக்கப்பட்டனர்.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...