கோவை குருடம்பாளையத்தில் நடைபெற்ற கொ.ம.தே.க ஊராட்சி அளவிலான ஆலோசனை கூட்டம் - 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட குருடம்பாளையம் பகுதியில் நடைபெற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஊராட்சி ஆலோசனை கூட்டத்தில், கட்சியில் உறுப்பினர்களை அதிக அளவில் சேர்ப்பது உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குருடம்பாளையம் பகுதியில் கடந்த 24ஆம் தேதி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஊராட்சி அளவிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ஜீவானந்தம் மனோகரனுக்கு சொந்தமான ரோஜா தோட்டத்தில் மாவட்ட விவசாய அணி துணைச் செயலாளர் A.P.வரதராஜன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில், கோவை மேற்கு மாவட்ட செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான K.S.குழந்தைவேலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த கூட்டத்தில், முக்கியமான 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1) வரும் 2023 ஆம் ஆண்டில் கோவை மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிளைகளிலும் நடைபெறும் கொடியேற்று விழாவை சிறப்பாக நடத்த வேண்டும்.

2) கிளைகள் தோறும் கட்சி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்.

3) கிளைகளில் உள்ள உறுப்பினர்களின் இல்லத்திற்கு கட்சியின் காலண்டர்களை (Yearly calendar ) கொண்டு சேர்க்க வேண்டும்.

4) முக்கியமான கிராமப்புற அடிப்படை வசதிகள் மற்றும் பொதுமக்கள் பிரச்சினைகளுக்காக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி குரல் கொடுக்க வேண்டும்.

5) "மறுமலர்ச்சி கொங்குநாடு" பத்திரிக்கையின் சந்தாவை அதிகப்படுத்த வேண்டும்.

6) தீரன் படை மற்றும் மகளிர் அணி அதிகப்படியான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



இந்த கூட்டத்தில், ஒன்றிய செயலாளர் தங்கவேல் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் கீரணத்தம் தனுஷ்கோடி, மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் கவிதா அருள்பிரகாஷ், மாவட்ட விவசாய அணி செயலாளர் மருதாசலம், ஒன்றிய துணைச் செயலாளர் பன்னிமடை பொன்னுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேபோல், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய பொறுப்பாளர்கள் கணேசன், தங்கவேல் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கவுன்சிலர் தீபன்குமார், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ஸ்ரீதர் கீரணத்தம் ஊராட்சி கவுன்சிலர் பரமேஸ்வரன்,

மேலும், கிளை நிர்வாகிகள் சூர்யா, ராஜகோபால், P.பாபு, தாமோதரசாமி, மகளிர் அணி பொறுப்பாளர்கள் ஜெகதீஸ்வரி, காஞ்சனா சாவித்திரி, காயத்ரி பெரியநாயக்கன் பாளையம் பேரூராட்சி நகர செயலாளர் பாலு (எ) பாலகிருஷ்ணன், பன்னிமடை ஊராட்சி செயலாளர் சிவஞானம் மாவட்ட IT WING செயலாளர் கார்த்திகேயன் ஆறுக்குட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், கூட்டம் தொடங்குவதற்கு முன் மாவீரன் தீரன் சின்னமலை திருவுருவப் படத்திற்கு அனைத்து நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.

Newsletter

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...