ரபேல் வாட்சை வைத்தே தமிழகத்தில் 25 எம்.பிக்களை பெற்றுவிடலாம் - கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

கோவை சுந்தராபுரத்தில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 98வது பிறந்தநாள் விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுகவின் ஊழல் குறித்து புகார் அளிக்க வலைத்தளம் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.



கோவை: கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் பாஜக மற்றும் அரிமா சங்கம் சார்பில், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 98வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 98 நபர்களுக்கு காது கேட்கும் கருவி மற்றும் செயற்கை கால்கள் வழங்கும் விழா நடைபெற்றது.



இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பயனாளிகளுக்கு காது கேட்கும் கருவி மற்றும் செயற்கை கால்களை வழங்கினார்.



இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய அண்ணாமலை, ஆண்டவன் எங்கள் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ வைக்கிறார். உண்மையான மனிதத்தை பார்க்க நலத்திட்ட உதவிகள் தான் தேவை.



நலத்திட்ட உதவியாக இருந்தாலும் அரசியல் பேசாமல் இருக்க முடியாது. திமுக வந்த பிறகு பாஜகவிற்கு எழுச்சி ஏற்பட்டு உள்ளது. அதுவும் எப்போதும் இல்லாத ஒரு எழுச்சி. ஊழலைப் பற்றி பேச ஒரு தராதரம் வேண்டும்.

பொதுமக்கள் திமுகவின் ஊழல் தொடர்பாக புகார் அளிக்க வலைத்தளம் ஒன்றை தயாரிக்க உள்ளோம். தமிழ்நாடு முழுவதும் திமுக அமைச்சர்களின் பினாமி யார் என்று கண்டுபிடிக்க இந்த அப்ளிகேஷன் மூலம் பொதுமக்கள் ஒரு புகைப்படம் எடுத்து பதிவு செய்யலாம்.

முதலமைச்சரின் குடும்பத்தை பற்றி பேச யாருக்கும் தைரியம் இல்லை. ஆனால் நமக்கு தைரியம் உள்ளது. டீக்கடையில் பேசும் பொழுது தான் அரசியல் ஆரம்பிக்கிறது.

பாஜகவின் சார்பில் பூத் கமிட்டி அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. Do or Die என்ற சூழலில் நாம் இருக்கிறோம். 2024-ல் திமுக கட்சிக்கு முடிவுரை எழுத முடியும். 25 எம்பிக்கள் வாங்கி விட்டால் திமுக ஆட்சியில் இருந்தால் என்ன இல்லை என்றால் என்ன. திமுக நடைபிணம் ஆகிவிடும்.

தொண்டர்கள் தான் பாஜக வெற்றியை தீர்மானிப்பவர்கள். எனவே, தொண்டர்களே கடுமையாக பாடுபடுங்கள். நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும். விரைவில் பொள்ளாச்சியில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும். 2024ஆம் ஆண்டில் பொள்ளாச்சியில் இருந்து திருப்புமுனை வரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.



இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகள் அரிமா சங்கம் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

12 மணி நேர பணிச்சுமை: திருமலையம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்

கோவை திருமலையம்பாளையம் பேரூராட்சியில் தூய்மைப்பணியாளர்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என 12 மணி நேரம் பணியாற்ற வேண்ட...

கோவையில் டயர் வெடித்து நடுரோட்டில் கவிழ்ந்த லாரி - சாலையில் சிதறிய தேங்காய்கள்

கோவை உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை நோக்கி தேங்காய் லோடு ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி, டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப...

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...