கோவை கிட்டாம்பாளையம் தொழிற்பேட்டை மூலம் 50,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் - கோவையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன்

கிட்டாம்பாளையம் பகுதியில் அமையவுள்ள தொழிற்பேட்டைக்கு அடிக்கல் நாட்டிய பின் விழாவில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், 2011ஆம் ஆண்டு ஆட்சி மாறிய பின் இந்த திட்டம் அதிமுகவால் கைவிடப்பட்ட நிலையில் தற்போது திமுக ஆட்சியில் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது என்றார்.



கோவை: கோவை மாவட்டம், கிட்டாம்பாளையம் பகுதியில், 316.04 ஏக்கர் பரப்பளவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், அறிஞர் அண்ணா கூட்டுறவு தொழிற்பேட்டை அமைய உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.



இந்த நிகழ்வில் தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்டு 30ஆம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு அரசின் பங்களிப்பாக ரூ.10 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது.

தொடர்ந்து, பயனாளிகள் பங்களிப்பு ரூ.14 கோடியே, 60 லட்சம் சேர்த்து, மொத்தம் ரூ.24.61 கோடி மதிப்பீட்டில் தொழிற்பேட்டைக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளான சாலைகள், தண்ணீர் குழாய்கள் பதித்தல், மேல்நிலை தண்ணீர் தொட்டிகள், ஆழ்துளை கிணறுகள் மற்றும் நிர்வாக அலுவலகம் அமைத்தல் போன்ற அடிப்படை வசதிகள. செயல்படுத்தப்பட உள்ளன.



இந்த விழாவில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது, நேரடியாக இங்கு 15,000 பேருக்கும், மறைமுகமாக 30,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியால் முன்னேடுக்கப்பட்ட திட்டம் இது.

இதில், தொழில் மனைகள் 585 அமைய உள்ளன. ஆசியாவிலேயே சிறந்த தொழிற்பேட்டையாக இந்த தொழிற்பேட்டை உருவெடுக்கும்.

இவ்வாறு பேசினார்.

இதைத்தொடர்ந்து நிகழ்ச்சிக்கு பின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

கிட்டாம்பாளையம் தொழிற்பேட்டை அறிவிப்பு, 2011 இல் ஆட்சி மாறிய பிறகு இந்த திட்டம் அதிமுக வால் கைவிடப்பட்டது. தற்போது திமுக ஆட்சியில் மீண்டும் தொடங்கப்படுகிறது.

2010ஆம் ஆண்டு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு மேம்பாட்டு பணிகள் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.24.61 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

316 ஏக்கர் பரப்பளவினை 535 தொழில் மனைகளாக பிரித்து தொழில்பேட்டை உறுப்பினர்கள் வசம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அடிப்படை வசதிகள் செய்ய 24 கோடியே 60 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

பயனாளிகளின் பங்களிப்பு 14 கோடியே 60 லட்சம், அரசு பங்களிப்பு 10 கோடி. ஆசியாவிலயே மிகப்பெரிய தொழில் பூங்காவாக இது அமைகிறது. இதன் மூலம் நேரடியாக 15,000 பேருக்கும், மறைமுகமாக 30,000 பேருக்கும் என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

மேலும் அன்னூர் விவகாரத்தை பொறுத்த வரை விவசாயிகள் மனமுவந்து நிலம் கொடுத்தால் மட்டுமே கையகப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில், மாவட்ட ஆட்சியர் சமீரன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, திமுக தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் நித்யா மனோகர், கோவை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திருமுருகன், தொழிற்பேட்டை நிர்வாக அலுவலர் சுகந்தி, கிட்டாம்பாளையம் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...