கோவையில் ஓய்வூதியர் தின விழா - பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை

கோவை மாவட்டம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர் பலராமன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக, மாநில தலைவர் கங்காதரன் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தார்.



கோவை: தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்டம் சார்பாக ஓய்வூதியர் தின விழா வடகோவை மாநகராட்சி ராமலிங்க மண்டப அரங்கில் இன்று நடைபெற்றது.

கோவை மாவட்ட தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர் பலராமன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக, மாநில தலைவர் கங்காதரன் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தலைவர் பலராமன், மாநில அரசு தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அதேபோல, மத்திய அரசு வழங்கியது போல் அகவிலை படியை உரிய தேதியில் மாநில அரசு ஓய்வூதியர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினார்.



விழாவில், உயிரின் சுவாசம் அறக்கட்டளை நிறுவனரும், ராயல் கேர் மருத்துவமனை தலைவருமான மருத்துவர் மாதேஸ்வரன், சமூக கொடையாளர் ஓய்வு பெற்ற அலுவலர் கிருஷ்ணன் ஆகியோருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.



நிகழ்ச்சியில், துணை தலைவர் ராமசுந்தரம், சங்க நிர்வாகிகள் முகமது சிங்காரவேலு வேலுச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...