திருப்பூரில் கோவில் நிலத்தை மீட்க கோரி அடையாள ஆவணங்களை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

ஊத்துக்குளி அடுத்த வெள்ளிரவெளி அருகேயுள்ள மாகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுத் தரக்கோரி பொதுமக்கள் அடையாள அட்டைகளை ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து போராட்டம்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் குன்னத்தூர் அருகேயுள்ள வெள்ளிரவெளி பகுதியில் நூறாண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த நாடார் சமூகத்தை சேர்ந்தவர்களின் குலதெய்வமான மாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.



அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த கோவிலில் தினமும் மூன்று கால பூஜை வழிபாடு மற்றும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசியல் செல்வாக்கு நிறைந்த மோகன் குமார் மற்றும் சின்னச்சாமி ஆகியோர் கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக பொங்கல் விழாவின் போது இடவசதி பற்றாக்குறை ஏற்படுவதால் கோவில் நிலத்தை மீட்டு கோவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.



இந்நிலையில், உடனடியாக கோவில் நிலத்தை மீட்டு தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டு உள்ளிட்டவற்றை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



வெள்ளிரவெளி பகுதி மக்களின் இந்த போராட்டத்தின் காரணமாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...