தொடரும் வறட்சியும், விவசாயிகள் மரணமும்- நடவடிக்கை எடுக்குமா மத்திய, மாநில அரசுகள் ?


தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப் போனதைத் தொடர்ந்து பல லட்சம் விவசாய நிலங்கள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது.

மேலும், குடிநீருக்குக்கூட தற்போது பஞ்சம் ஏற்பட்டு வருவதால் மக்கள் பெரும் சிறமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

வறட்சியினால் விவசாயம் பொய்த்துப்போனதால் தற்போது வரை தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மன வேதனையில் உயிரிழந்துள்ளனர்.

இதனைத் தடுக்கக் கோரியும், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் விவசாய சங்கங்கள், விவசாயிகள், பொதுமக்கள் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்துவந்தாலும் தற்போது வரை மத்திய, மாநில அரசுகள் இதுகுறித்து முழுத்தீர்வினை எட்டவில்லை.

இந்நிலையில், தற்போது ஈரோடு மாவட்டம் பவானி அருகே நெரிஞ்சிபேட்டை என்னும் பகுதியில் தனது விவசாய நிலத்தில் 2 ஏக்கர் பரப்பிலான பருத்தி செடி வறட்சியின் காரணமாக காய்ந்து போனதை கண்டு மனவேதனையில் ராஜேந்திரன் என்ற விவசாயி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தினையும், அரசு நிர்வாகத்தின் மீது அதிருப்தியினையும்  ஏற்படுத்தியுள்ளது. இனியும் வறட்சியின் காரணத்தால் விவசாயிகள் உயிரிழப்பதை தடுக்க மாநில அரசும், மத்திய அரசும் முன்வர வேண்டும் என தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...