'மாண்டஸ் புயல்' - நீலகிரி மாவட்டத்தில் 2வது நாளாக கடும் குளிர், மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

மாண்டஸ் புயல் காரணமாக உதகை, குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகிய பகுதிகளில் 2வது நாளாக அடர்ந்த பனி மூட்டத்துடன் கடும் குளிர் நிலவுவதால், சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதி.


நீலகிரி: “மாண்டஸ் புயல்” காரணமாக நேற்று காலை முதல் நீலகிரி மாவட்டத்தில் கடும் பனி மூட்டத்துடன் கடும் குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அடர்ந்த பனி மூட்டத்துடன் கடும் குளிர் நிலவி வருகிறது.

கடுமையான குளிர் காரணமாக அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டது. அதனுடன் மழையும் பெய்ததால் முக்கிய சாலைகள் மற்றும் சுற்றுலா தளங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.



இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் நீலகிரி மாவட்டத்தில் அடர்ந்த பனி மூட்டத்துடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.



மேலும் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருப்பதால் வாகனங்கள் அனைத்தும் குறைந்த வேகத்தில் முகப்பு விளக்குகளை ஏரிய விட்டபடி பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...