கோவையில் ஈஷா சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம் - 600க்கும்‌ மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்

ஈஷாவின் 'ஆரோக்கிய அலை' அமைப்பின் சார்பில் கோவையில் கடந்த டிச.4-ல் மத்வராயபுரத்திலும், டிச.5 ஆம் தேதி ஆலாந்துறையில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்களில் பழங்குடி மக்கள் உட்பட சுமார் 600 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


கோவை: கிராமப்புற ஏழை மக்களுக்கு தரமான மருத்துவ சேவை அளிக்கும்‌ நோக்கத்தில்‌, ஈஷா அமைப்பின் “கிராமப்‌ புத்துணர்வு” இயக்கத்தின்‌ “ஆரோக்கிய அலை” அமைப்பானது, முன்னணி மருத்துவமனைகளுடன்‌ இணைந்து கோவை மாவட்டத்தில்‌ பல்வேறு விதமான இலவச மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.



அதன்‌ ஒரு பகுதியாக, கடந்த டிசம்பர்‌ 4-ம்‌ தேதி மத்வராயபுரத்தில்‌ உள்ள அரசு மேல்நிலைப்‌ பள்ளியிலும்‌, டிசம்பர்‌ 5-ம்‌ தேதி ஆலாந்துறையில்‌ உள்ள ஈஷா கிராம மருத்துவமனையிலும்‌ பல்துறை இலவச மருத்துவ முகாம்‌ நடைபெற்றது.



இதில்‌ ஆலாந்துறை, செம்மேடு, இருட்டுப்பள்ளம்‌, மடக்காடு, தொண்டாமுத்தூர்‌, பூலுவப்பட்டி, தொம்பிலிபாளையம்‌ உட்பட பல்வேறு கிராமங்களைச்‌ சேர்ந்த பொதுமக்கள்‌ பங்கேற்று இலவச மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்‌.

இதில், இருதயம்‌, கண்‌, காது, மூக்கு, தொண்டை, எலும்பு, தோல்‌, பல்‌, நரம்பு, பெண்கள்‌ மற்றும்‌ குழந்தைகள்‌ நல மருத்துவம்‌ என ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும்‌ சிறப்பு மருத்துவர்கள்‌ பங்கேற்று மருத்துவ ஆலோசனைகளை‌ வழங்கினர்‌.

குறிப்பாக, கண்‌ புரை பாதிப்பு கண்டறியப்பட்ட 43 நோயாளிகளுக்கு அரவிந்த்‌ கண்‌ மருத்துவமனையில்‌ கண்‌ புரை நீக்க அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டது.

மேலும்‌, முகாமின்‌ சிறப்பம்சமாக, இருதய நோயாளிகளுக்கு எக்கோ பரிசோதனை, மகளிருக்கான கர்ப்பப்பை பரிசோதனை, மார்பக புற்றுநோய்‌ கண்டறியும்‌ பரிசோதனை, காது கேட்கும்‌ திறனுக்கான பரிசோதனைகளை பொதுமக்கள்‌ இலவசமாக செய்து கொண்டனர்‌. இதுதவிர அனைத்து மருந்துகளும்‌ இலவசமாக வழங்கப்பட்டன.

இந்த 2 நாள்‌ மருத்துவ முகாமானது,‌ கோவை அரவிந்த்‌ கண்‌ மருத்துவமனை, வெள்ளியங்கிரி உழவன்‌ உற்பத்தியாளர்‌ நிறுவனம்‌, கங்கா மருத்துவமனை, கோவை ரோட்டரி மெட்ரோபொலிஸ்‌ சங்கம்‌ ஆகிய அமைப்புகளுடன்‌ இணைந்து நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும...

கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுப...

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...

கோவை மேற்கு மண்டலத்தில் குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நடைபயணம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.38க்குட்பட்ட கல்வீரம்பாளையம் பள்ளி முதல் பொம்மனாம்பாளையம் கோயில் வரை, குப்பைகள...

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...